21 அவள் கேட்டது வாளா, கிருத்துவமா? என்பதுதான் கிருத்துவத்தை ஒப்புக் கொள்ளாமல் முஸ்லிம்கள் அனைவரும் இஸபெல்லாவினால் பலியானார்கள். ஒரு முஸ்லிம் கூட எஞ்ச வில்லை.ஆம்,ஒரேயொரு முஸ்லிம் கூட. இஸபெல்லா எடுத்த நடவடிக்கையில் ஸ்பெயின் நாட்டில் எஞ்சியிருக்கவில்லை. இந்த வரலாற்றை இங்கே ஏன் நினைவு படுத்துகிறேன் என்றால், இஸபெல்லா கேட்டது வாளா, கிருத்துவமா என்பது. அந்த முறையைத்தான் இங்கே இஸ்லாமியப் பேரரசர்கள் அதற்கு முன்பாகவே கடைப் பிடித்தார்கள், வாளா குர்ஆனா? என்றுபோர் தொடுத்தார்கள் என்று ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமி போன்றோர் கூறுவார்களேயானால், ஆயிரமாண்டுகள் இஸ்லாமியப் பேரரசர்கள் ஆண்ட இந்தியாவில், அந்த ஆயிர மாண்டுகளிலிருந்து இன்றுவரை இஸ்லாமியர்கள் சிறுபான்மை இனமாக இருப்பது எப்படி? என்று நாம் கேட்பது அவர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும் என்பதற்காகத்தான். 15.ந்தாம் நூற்றாண்டிலே ஒரு முஸ்லிம்கூட இல்லாது ஸ்பெயினில் அழிக்கப்பட்ட தென்றால்- அங்கே முஸ்லிம்களே இல்லாது செய்யப் பட்டுவிட்ட தென்றல்- இந்தியாவில் இஸ்லாமியப் போரசுகள் நடந்தபோதும் சரி, அதன் பின்னர் இன்று வரையிலும் சரி இஸ்லாமியர்களும் இந்துக்களும் சகோதர வாஞ்சையுடன் பழகி வாழ்ந்து வருகிறார்களே, அப்படியிருக்கும் இந்த நாட்டில், இஸ்லாம் வாள்கொண்டு பரப்பப்பட்டதென்ற கூற்று மூளைக்கு ஏற்புடையதாக இருக் கிறதா ? என்று ஸ்ரீலஸ்ரீ காமகோடி பீடம் ஆச்சாரியசுவாமி அவர்கள் சிந்திக்க வேண்டும். இஸ்லாமியப் பேரரசர்கள் இந்துமத ஆலயங்களுக்கும் மடங்களுக்கும் வழங்கியுள்ள மான்யங்கள் ஏராளம், ஏராளம்! இதுபோன்றே இஸ்லாமிய ஞானப் பெரியார்கள் அடங்கி யுள்ள இடங்களுக்கு (தர்காக்களுக்கு) இந்துக் குடிமக்களே யன்றி இந்துப் பேரரசர்களும் வழங்கியுள்ள மான்யங்கள் நிறைய உண்டு. .
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/30
Appearance