வாள்கொண்டு இஸ்லாம் பரப்பப் பட்டிருக்குமானால், இந்த பரஸ்பர ஒத்துழைப்பு, உபகார அன்னியோன்ய வாழ்க்கைநெறியை வகுத்தளித்தவர்கள் யார் என்பதையும் ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் கவனிக்க வேண்டும். இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். டில்லி, ஆக்ரா, பீஜப்பூர் போன்ற பழம்பெரும் நகரங்களில் நீண்ட நெடுங்காலம் இஸ்லாமியப் பேரரசு கோட்டைகள் அமைத்து. ஆட்சி புரிந்திருந்த வரலாறு நமக்குத் தெரியும். அந்த நகரங்களிளெல்லாம் அன்றும் சரி இன்றும் சரி, பெரும்பான்மையினராக வாழ்பவர்கள் இந்துப் பெருங்குடி மக்கள்தாம். . தெற்கே ஆற்காட்டில் நீண்ட நெடுங்காலமாக இஸ்லா மியப் பேரரசு ஆட்சி புரிந்திருக்கிறது. அங்கே அன்றும் இன்றும் பெரும்பான்மையினர் இந்துக்கள்தான். திருச்சிராப் பள்ளியில் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்ற துண்டு. அங்கும் நிலை இதுதான். ஏன், ராமன் ஆண்ட அயோத்தியிலும் வெள்ளைக்காரன் வரும் வரை இஸ்லாமிய நவாபுகளின் (மன்னர்களின்) ஆட்சி நடை பெற்றுக்கொண்டு தான் இருந்தது. அங்கும் கூட என்றுமே இஸ்லாமியர்கள் சிறுபான்மையாளர்தாம். அண்மைக் காலம் வரை ஹைதராபாத்தில் இஸ்லாமிய மன்னராட்சி நடைபெற்று வந்ததை நாமறிவோம். அந்த மன்னராட்சியிலேயே அவருடைய தலைநகரமான ஹைதராபாத் தில் கூட இஸ்லாமியர்கள் சிறு பான்மையினர்தாம். வாள்கொண்டு இஸ்லாம் பரப்பப்பட்டதென்று மனந் துணிந்து, அறிந்தே பொய் கூறுகின்றவர்களுக்குக் கூறுவேன்: வாள்கொண்டு இஸ்லாம் பரப்பப்பட்டிருக்குமானால், அந்த இஸ்லாமிய மன்னர்கள் வாழ்ந்த தலை நகரிலேயே இஸ் லாமியர்கள் சிறுபான்மையினராகவும் இந்துக்கள் பெரும் பான்மையினராகவும் இந்து மன்னர்களின் தலைநகரங்களில்
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/31
Appearance