உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 முஸ்லிம்கள் பெரும் பான்மையினராகவும் வாழுகின்ற அரிய காட்சி, வாளேந்திய சமயத்தார்க்கும் வாளுக்கு இரையா னார்கள் என்று கூறப்படும் சமயத்தாருக்குமிடையே நடக்க முடியுமா? இந்தியாவை "சுமார், எண்ணூறாண்டு காலம் முஸ்லிம்கள் ஆண்டிருந்தும் அவர்கள் ஆண்டதலை நகரங்களிலே கூட முஸ்லிம்கள் சிறுபான்மையினராகத்தான் வாழ்ந்து வந்து 'ள்ளனர்' என்கின்ற உண்மையோடு இன்னொரு பேருண்மை, வெள்ளையராட்சி இங்கு தோன்றும் வரையில் இந்து முஸ்லிம்கள் எந்தவித வேற்றுமையுமின்றி கலந்து பழகி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதாம். உதாரணமாக, முஸ்லிம் மன்னர்களிடம் இந்து மாவீரர்களும், இந்து மன்னர் களில் இஸ்லாமிய வீரர்களும் போர்ப்படையினராக இருந்ததே இந்திய இந்து முஸ்லிம் வரலாறு, 'முஸ்லிம்களின் மாபெரும் விரோதி' என்று பின்னாளில் வெள்ளையர்களால் கற்பித்து எழுதிவைக்கப்பட்டுள்ள மாமன்னன் சிவாஜி சத்ரபதியின் தம்பி யும், சிறிய தந்தையும் பீஜபூர் சுல்தானிடம் பெரும் பதவி வகித்தவர்கள் என்பது வரலாற்றுண்மை. தஞ்சையில் ஏற்பட்டி ருந்த நாயக்க மன்னர்களின் கடைசி மன்னனான மன்னார் நாயக்கன் காட்டில் ஓடி மறைந்த பின்னர் ஆட்சி பீடமேறிய சிவாஜியின் தம்பி, பீஜபூர் சுல்தானின் கீழ் மூவாயிரம் போர் வீரர்களை வழி நடத்துகின்ற தளபதியாகப் பணியாற்றியவர். சிவாஜியின் தட்சிணப் படையெடுப்பும் பீஜபூர் சுல்தானின் படை த்தளபதி என்கின்ற பெயரில் நடந்தது தான். செஞ்சியை ஆண்ட ஜெய்சிங் (தேசிங்) கின் தந்தை டில்லிப் பாதுஷாவின் சார்பில் செஞ்சியில் மறைந்திருந்த விஜயநகரப் பேராசின் கடைசி வாரிசாளரைப் பிடிப்பதற்குப் படை நடத்தி வந்து டில்லிப் பேரரசின் சார்பில் செஞ்சியில் 'இராணுவ ஆட்சித்" தலைவராக இருந்து நாடாண்டவர் தான். இவைகளைப் போன்று ஆயிரமாயிரம் நிகழ்வுகளை அடுக்கடுக்காக நமது வரலாறுகள் கூறக் காண்கிறோம். 48