24 முஸ்லிம் கட்கும் இந்துக்கட்கும் பகை இருந்திருக்குமானால் முஸ்லிம் மன்னர்களிடம் இந்துத் தலைவர்களும் வீரர்களும் இந்து மாமன்னர்களிடம் முஸ்லிம் தலைவர்களும் தளபதிகளும் எப்படிப் பணிபுரிந்திருக்க வியலும்? பணி புரிந்ததோடன்றி- வெற்றி தேடி அளித்திட போரிட்டிருக்க முடியும்? ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது இந்தியாவை ஆண்ட முஸ்லீம் மன்னர்களும் சரி, இந்து மன்னர்களும் சரி தங்கள் தங்கள் மதங்களை நிலைநாட்டிடப் போர் புரிந்திடவில்லை. தங்கள் தங்கள் ஆட்சியை விரிவுபடுத் திக் கொள்ளவே போரிலீடுபட்டனர். சிவாஜியும், அவுரங்க ஜேபும் பகைத்துப் போரிட்டுக் கொண்டதற்கு அடிப்படையும் இதுதான். எனவேதான் இவர்களின் ராஜ்யங்கள் விரிவடைய இந்து மன்னர்களிடம் முஸ்லிம் படை வீரர்களும் தளபதிகளும், முஸ்லிம் அரசர்களிடையே இந்துப்படை அணியினரும் வீரத் தளபதிகளும் இணைந்து நின்று போர் புரிந்துள்ளனர். மதப் போர் என்றால் இவை நடந்திருக்க இயலாது அல்லவா? இந்து முஸ்லிம் ஆகிய இருசாராரின் சுதந்திர வாழ்விற்கும் வெள்ளைய ராட்சி வேட்டு வைக்கக் கூடியது என்பதினாலேயே வெள்ளைய ராட்சியை எதிர்ப்பதில் முஸ்லிம் மக்கள் மட்டுமின்றி மன்னர் களும் ஒன்றுபட்டு நின்றனர். வெள்ளையன் தங்கள் ஆட்சிக்குக் கீழ்ப்படியுமாறு ஜான்ஸி ராணிக்கு அனுப்பிய கடிதத்திற்கு ஜான்ஸி ராணி அனுப்பிய பதில், கடிதமல்ல.தனது தளபதியின் (முஸ்லிம்) தோட்டாவை அவரிடமிருந்து பெற்று "இதுவே எனது பதில்" என அந்த வீரமங்கை அனுப்பியதை வீர வாக்கி யங்களில் நமது வரலாறு உரைக்கக் காண்கின்றோம். மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். இங்கே இந்து முஸ்லிம் பகைப்பு மதப்போர் நடந்திருக்கு மானால் இவ்வாறு நடந்திருக்க இயலுமா? இன்னொன்றை நாம் நினைவு கூர்ந்து கொள்வது மிக மிக அவசியம். அதாவது,
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/33
Appearance