உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் கண்ட வெள்ளையன் இந்த ஒற்றுமை சிதைந்தால் ஒழிய இந்த நாட்டினை நாம் ஆளமுடி யாது; ஆம், ஆளவே முடியாது என உணர்ந்தான். இந்து முஸ்லிம்களிடையே பகைப்பு எண்ணம் வளர்ந்திடும் வகையில் வரலாற்றினைத் திரித்து எழுதிடலானான்! இன்று நம்மிடையே உள்ள நமது வரலாறுகளெல்லாம் வெள்ளையன் எழுதியவை, அல்லது அவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட வைதானே? இன்று, வெள்ளையன் போய் விட்டான். ஆனா லும் அவன் வைத்த தீ இந்து முஸ்லீம் பகை நெருப்பு, அணையவில்லை. மாறாக வளர்ச்சி பெற்று வரக் காண்கிறோம். இது எதிலே முடியும்? எங்கே கொண்டுவிடும்? என்கின்ற தீர்க்கதரிசனக் கண்ணோட்ட வளர்ச்சி நமது இளைஞர்களிடம் இல்லை. வருந்தத்தக்க இந்நினைவுடன் வெள்ளையரரட்சியை எதிர்த்து நம்மவர்கள் நடத்திய போராட்ட நாட்களில் இந்து முஸ்லிம் ஒற்றுமை உணர்வு எவ்வாறிருந்து ளது என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம். . வெள்ளையராட்சியில் முதல் சிப்பாய்க் கலவரம் 1806-ல் ஜூலை மாதத்தில் வேலூரில் வெடித்தது. அந்த (ச்சுதந்திர)ப் போரில் கலந்து கொண்ட சிப்பாய்கள் முஸ்லிம்களாக மட்டுமோ இந்துக்களாக மட்டுமோ இருந்திட வில்லை. இரு சமயச் சிப்பாய்களும் தோள் இணைந்து நின்றே போரிட்டனர். ஒரே நாளில் நூற்றெழுபது வெள்ளை அதிகாரிகளை வேட்டு வைத்துத் தீர்த்தனர். "சூரியன் அஸ்தமனமாகிடா ஆட்சி யைக்கொண்ட வெள்ளையரின் ஆட்சிக்கொடியான யூனியன் ஜாக் எனும் கொடி, மிகக் கம்பீரத்துடன் வேலூர்க் கோட்டை முகப்பில் நெடிய கம்பம் ஒன்றில் பறந்துகொண்டிருந்தது. அதைப் பறக்க விட்டிருந்தார்கள் அங்கிருந்த வெள்ளை அதி காரிகள். சுதந்திர ஆர்வம் கொண்ட நமது சிப்பாய்கள் வெள்ளையரின் தோட்டாவுக்கு மார்பினையீந்து கொண்டே கம்பத்தில் ஏறி, யூனியன் ஜாக் கொடியை இறக்கினர். இறக்கியதோடல்லாமல் தமது தேசியக் கொடியை அதே .