26 கம்பத்தில் ஏற்றி வைத்து அதற்கு மரியாதை செலுத்தினர். ஆம், இந்து முஸ்லிம் என்ற பாகுபாடின்றி நாம் அனைவரும் இந்தியர்களே என்ற உணர்வுடன் தேசியகொடிக்கு மரியாதை செலுத்தினர். அன்று ஏற்றிய தேசியக் கொடி எது தெரியுமா? தீப்பு சுல்தானைக் கொன்று அவர் தம் குடும்பத்தினரை வேலூர்க் கோட்டையில் கொணர்ந்து சிறைப் படுத்தி வைத்திருந்ததே வெள்ளையராட்சி, அந்தக் குடும்பத் தாரிடம் இருத்த திப்புசுல்தானின் ஆட்சிக் கொடியைத்தான் அன்று போரிட்ட நமது இந்து - முஸ்லிம் சிப்பாய்கள் அனை வரும் தேசியக் கொடியாக முதல் இந்திய தேசியக் கொடியாக ஏற்றி வைத்துத் தங்களின் சுதந்திர வேட்கையை வெளி யிட்டார்கள். . எண்ணிப் பார்க்க வேண்டும். "இந்துக்களின் விரோதி திப்புசுல்தான்" என்று சரித்திரம் படைத்தளித்து நம்மிடையே சண்டையை முட்டிவிட்டிருக்கிறார்களே, அவர்களின் கூற்று உண்மையானால், இந்துக்களை அழிக்கின்ற பணியை திப்பு சுல்தான் செய்திருப்பாரேயானால் அவருடைய ஆட்சிக் கொடியை இந்துச் சிப்பாய்களும் சேர்ந்து எப்படி ஏற்றி வைத்திருப்பார்கள்? தேசத்தில் உள்ள இந்துத் தலைவர்கள் தான் எப்படி அதை ஒப்பியிருப்பார்கள்? அன்றும் சங்கரர் மடங்கள் இருந்தன. அந்த மடங்களிலும் சங்கராச்சாரிய சுவாமிகள் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களேனும் எதிர்த்தார்களா? வாள் கொண்டு பரப்பப்பட்ட மதத்தைச் சார்ந்த அரசன் கொடி இது. இது நமது நாட்டின் தேசியக் கொடியாகாதெனக் குரல் கொடுத்தார்களா? அப்படி அவர்கள் சொல்லாததற்குக் காரணம் என்ன? அவர்கள் திப்புவின் ஆட்சியைக் கண்டவர்கள். அது எவ்வாறு நடந்தது என்பதை அறிந்தவர்கள். காஞ்சி காமகோடி மடம் போன் றல்லாமல் அதிகார பூர்வமான சங்கரர் மடங்கள் இந்தியத் திருநாட்டில் அமைந்துள்ளன. சிருங்கேரி மடம் அவ்வைந் துள் ஒன்று. திப்புவின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அது அடைந்ததை அன்றைய சங்கராச்சாரியாரும் இன்று வரை
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/35
Appearance