உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 யுள்ள அவருடைய வாரிசுகளும் அறிவர். அம்மடத்திலுள்ள சாசனங்களும் அவற்றை உறுதி செய்து கொண்டிருக்கின்றன. வெள்ளையனை வெளியேற்றி இந்தியாவைச் சுதந்திர நாடாக ஆக்க வேண்டுமென எழுந்த போராட்டத்திலே இந்துக் களுக்கு எவ்வளவு பங்குண்டோ அவ்வளவு பங்கு-ஏன் அதிலும் கூடுதலான பங்கு முஸ்லிம்கட்கு உண்டு. "இந்தியாவுக்குச் சுதந்திரம் வேண்டாம்" எனச் சொன்ன வர்கள் இந்துக்களிலே நிறையப்பேர் உண்டு. அவர்களில் பலர் 'வெள்ளையன்தான் இந்தியாவை ஆளவேண்டும்" என்பதை வலியுறுத்திக் கட்சிகளே நடத்தியுள்ளனர். ஆனால், முஸ்லிம் களில் ஒரே ஒரு நபர் கூடச் "சுதந்திரம் வேண்டாம்" என்று கூறியதாக வரலாறில்லை. சுதந்திரப் போராட்டக் கர்த்தாக் களே முஸ்லிம்கள்தாம். இதை நாம் சொன்னால் ஏற்கமாட் டார்கள்; இந்து மகாசபையின் தலைவர் வீர சவர்க்கார் உரைக் கின்றார். 6 "முதலாவது சுதந்திர யுத்தத்தை உருவாக்கிய மகா மேதாவிகளுள் அஸிமுல்லாகானுக்குத்தான் கொடுக்க வேண்டும்..." முதல் இடம் .. எரிமலை', பக்கம்-27 "இந்தியாவின் சுயேச்சை, ஆங்கிலேயர்களால் சிறிது சிறிதாக அபகரிக்கப்பட்டு வருவதை முதன் முதலாக அறிந்து கொண்டவர்கள், புனா நானா பர்னவிஸும், மைசூர் ஹைதர் சாஹிபும்தான்..." 201 " எரிமலை". பக்கம்-16. மாமன்னர் ஹைதரலீ அவர்கள்தான் வெள்ளையனை எதிர்த்த முதல்வர் என்பதுதான் வரலாறு. வீர சவர்க்கார் இந்துமகர சபையின் தலைவரானதினால், நானாபர்னவிஸையும் இணைத்துக் கூறியுள்ளார் என்பதே உண்மை. (ஆசிரியர்). 4 ஒரு மௌலவியும் ஓர் ஆங்கிலேயரும் நண்பராக இருந்த னர், மௌலவி நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையிலிருந்த