28 போது அந்த ஆங்கிலேயரும் கூட இருந்தார். மௌலவி மரணம் அடைவதற்கு முன் உங்களது கடைசி விருப்பம் என்னவென்று ஆங்கிலேயர் கேட்டதற்கு, "நான் உங்களுக்கு என் மனத்தில் உள்ள ஓர் ஏக்கத்தை ஒளிக்காமல் கூறுகிறேன். என் ஆபுளில் இரண்டு வெள்ளையரைக் கூட என் கையினால் கொல்லும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லையே என்று தான் வருந்துகிறேன்" என்பதாக அந்த மௌலவி பதிலளித்தார். . -"எரிமலை பக்கம் - 46 சவர்க்கார் முஸ்லிம்களைப் பகைவர்களாகக் கருதுகின்றவர் களின் தலைவர் தலைவர் என்பதை உலகறியும், அவரால் கூட சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஏற்ற மிகப் பெரும் பங்கினை மறைத்திட இயலவில்லை. அயோத்தி நவாபிடம் அவர் தம் குடிமக்கள் (இந்துக்கள்) வைத்திருந்த பேரபிமானத் தைப் படிப்போர் வியக்கும் வண்ணம் எழுதுகிறார். நவாபை வெள்ளையன் சிறைப் பிடித்தபோது அயோத்தி ராஜ்யக் குடி மக்கள் (இந்துக்கள் தான்) கதறி அழுதவிதம் பற்றிச் சவர்க்கார் உரைத்திருப்பதை முஸ்லிம்களைப் பகைப்போர் படித்துப் பார்க்க வேண்டும். கொதித்தெழுந்த முதற் சுதந்திரப் போரிலே கிராமங்களி லெல்லாம் கூட பச்சை (ப் பிறைக்) கொடி இல்லங்கள் தோறும் பறக்கவிடப் பட்டிருந்தாகக் குறிப்பிடுகின்றார் சவர்க்கார். கொதித்தெழுந்த டில்லி மக்கள் வெள்ளையர்களைக் கொன்று விட்டுக் கோட்டையைக் கைப்பற்றி பஹதூர்ஷா என்னும் முஸ்லிம் மாமன்னரை வெற்றி முழக்கத்துடன் சிம்மாசனத்தில் ஏற்றினர் என்றும் அந்த முஸ்லிம் மன்னரின் கொடிதான் சுதந்திரக்கொடியாக அனைவராலும் ஒப்பி ஏற்றி வைக்கப்பட்ட தென்றும் சவர்க்கார் தனது ' 'எரிமலையில் குறிக்கின்றார். சவர்க்காரின் 'எரிமலை வெள்ளையராட்சியில் தடை செய் யப்பட்டிருந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவில் தடை இல்லை என்றாலும் இக்கால இளைஞர்கள் படிக்கவியலா நிலையிலே மறைக்கப்பட்டு விட்டது!
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/37
Appearance