29 இவற்றையெல்லாம் இங்கு நான் குறித்திடுவற்குக் காரணம், இந்துக்களும் முஸ்லிம்களும் இந்த நாட்டு மக்கள் நாம் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு நேச உறவு கொண் டாடி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை நினைவூட்டுவதற்காகத் தான். இங்கு இந்து முஸ்லிம்களிடையே வகுப்பு கலவரம் தோன்றியதே முதலில் வெள்ளையர் ஆட்சியில்தான். அதற்கு முன்னே நடந்தவைகள் மன்னர்கள் சண்டையே தவிர மக்கள் சண்டைகளல்ல. ஒளரங்கஜேப் பாதுஷாவை எதிர்த்துச் சிவாஜி மாமன்ன ரும், சிவாஜி மாமன்னரை எதிர்த்து ஔரங்கஜேப் பாதுஷா வும் தங்கள் தங்கள் படைகளைக் கொண்டு மட்டுமே தான் போரிட்டுக் கொண்டனர். மக்கள் இவர்களில் யாருக்காகவும் பரிந்து கொண்டு எந்த ஒரு நிலையிலும் போருக்கெழவில்லை. அவர்கள் தங்களுக்குள் ஒன்றுபட்ட தன்மையில் தம் தம் தொழில்களையும் விவசாயத்தையும் கவனிப்பதில்தான்அக்கறை செலுத்தி வாழ்ந்து வந்துள்ளனர். இதர இந்து முஸ்லிம் மன்னர்களிடையே நடந்த சண்டைகளும் இவ்வாறாக ஆனவை களே. ஆட்சியை எதிர்த்து மக்கள் போரிட்டது, அதாவது மக்கள் இயக்கமாகப் போராட்டம் நடத்தப்பட்டதே வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து நடந்ததுதான் இந்தியாவைப் பொறுத்த வரை முதல் கட்டம். வெள்ளையராட்சியை எதிர்த்து நடத்த போராட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு சில பாதிக்கப்பட்ட மன்னர்கள் சேர்ந்திருந் தாலும் அவர்கள் இயக்கத் தலைவர்கள் அல்ல. மக்கள் தலை வர்கள்தான் தலைமை தாங்கி நடத்தினர். இதில் முஸ்லிம் எண்ணிக்கை கூடுதலா? இந்துக்கள் எண்ணிக்கை கூடுதலா? எது கூடுதல் என்கின்ற ஆராய்ச்சி இங்கு தேவையில்லை. இந்து, முஸ்லிம்கள் ஆகிய இரு சாராருமே இணைந்து நின்றே போரிட்டனர். இப்படி அவர்கள் போரிட்டதற்கான அடிப்படைக் காரணமாக இருந்தவற்றுள் தலையாயது.
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/38
Appearance