உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இந்து சமயத்தையும் இஸ்லாமிய மார்க்கத்தையும் அழித் திட, கிருத்துவமதத்தை இந்தியாவில் நிலைநாட்டிட வெள்ளைய ராட்சி விழைகின்ற தென்கிற கணிப்பு, இந்து முஸ்லிம் மக்களிடையே, மார்க்க மேதைகளிடையே அரும்பி மலர்ந்து விரித்து நிலைபெற்றதேயாம்.

இத்தகவலை வீர சவர்க்கார் தனது "எரிமலை"யில் தெளி வாகக் கூறுகிறார். அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் அங்குள்ள சுதேசிகளிடம் கிருத்துவ மதத்தைப் பரப்புவதில் வெற்றிக்கண்ட ஆங்கிலேயர்கள், திட்டமிட்டே வெள்ளைப் பாதிரிமார்களை இங்கே இறக்குமதி செய்தார்கள் என்று குறிப் பிடுகிறார் இந்து சமயத்தையும் இஸ்லாமிய மார்க்கத்தையும் ஆங்கி லேயக் கிருத்துவப் பாதிரிகள் வசைபாடியவிதம் இந்து முஸ்லிம் மக்களிடையே ஆங்கிலேயர் எதிர்ப்பாக உருவகமுற்ற தென்கிறார் சவர்க்கார். இங்கே ஒன்றினை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, ஆங்கிலேயக் கிருத்துவர்கள் இந்து மதத்தினரையும் இஸ்லாமியர்களையும் தங்கள் மதத்தவர்களாக ஆக்கிட முயன்ற போது மக்கள் மக்கள் தங்களின் தங்களின் உயிரினையும் இழக்கத் துணிந்து எதிர்த்திடத் தலைப்பட்டார்கள் என்றால், இங்கு ஆட்சி பீடமேறிய முஸ்லிம் மன்னர்கள் இந்து சமயத்தை அழித்து இந்தியாவை இஸ்லாமியச் சமயமாக்கிட முயன்றிருந்தால், வெள்ளையர் எதிர்ப்பினை மக்கள் துவக்கியது போன்று இஸ்லாமியர் எதிர்ப்பும் இங்கே தோன்றியிருத்தல் வேண்டுமல்லவா? ஏன், தோன்றிடவில்லை? ஆங்கிலேயர்கள் நீண்ட நெடுங்காலத்திற்கு இந்தியாவை ஆள முடியாதென்பதை உணர்ந்தே இருந்தார்கள். எனவே, தாங்கள் ஆளாவிட்டாலும், தங்களுடைய மொழியும் கலையும் கலாச்சாரப் பழக்க வழக்கங்களும் இந்தியாவை விட்டு அகலா திருக்க வேண்டும் என எண்ணினார்கள். எனவே அதற் கானவை பற்றிச் சிந்திக்கலானார்கள். அவர்கள் சிந்தனைக் கெட்டியதே இந்து-முஸ்லிம் இடையே பகைமையை வளர்ப்ப