31 தென்பது. இந்த அரிய கண்டுபிடிப்பை ஆங்கில எழுத்தாளர் களைக் கொண்டு எழுதிடப் பணித்தார்கள். அவ்வெழுத்தாளர் களின் கற்பனையில் தோன்றியதே இந்துக் கோயில்களை முஸ்லிம்கள் இடித்தார்கள் என்பதும், இந்துக்களைக் கொன் றெழித்தார்கள் என்பதும். இவர்களின் இந்தக் கற்பனைத் புனைவுகளை இந்தியாவில் உள்ள ஒரு சில கூலி எழுத்தாளர்களும் மெய்யென நம்பித் தங்களின் கற்பனைகளையும் சேர்த்திணைத்து சரித்திரங்கள் என்கின்ற பெயரில் எழுதித் தள்ளி இருக்கிறார்கள். இவ்வித எழுத்தாளர்களை ஊக்குவிப்பதும் இவர்களின் பாதகமான எழுத்துக்களைப் பள்ளிப் பாடங்களாக்குவதும் வெள்ளையராட்சியின் பணியாக இருந்தது.ஒரு நூற்றாண்டுக் காலங்கட்கு மேலாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட இப்பணி யினால் படித்த இந்துக்கள் மத்தியிலே முஸ்லிம்களைப் பற்றித் தவறான எண்ணம் வலுவாகப் பற்றிக் கொள்ளலாயிற்று. முஸ்லிம்கள் இதைத் தடுத்து உண்மை விளக்கம் தருவதில் அக்கறை கொள்ளாத காரணத்தால் பொய், மெய்வடிவம் பெற்று நன்கு நிலைத்துத் தீயவை பரவிட வழி வகுத்திருக்கக் காண்கின்றோம். இந்தத் தீய பிரச்சாரத்தின் இன்னொரு வடிவம், மியூஸியம், பழங்காலக் கோட்டை கொத்தளங்கள் போன்ற வற்றுள் உள்ள 'கையிடு'கள் என்கின்ற விளக்க உரைஞர் களாலும் நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் அநேகமாக இந்துக் களாகவே உள்ளதால் முஸ்லிம்கட்கு எதிரான கதைகளைத் தாங்கள் விரும்பிய வாறெல்லாம் கற்பித்துரைத்து இந்துக் களிடையே முஸ்லிம்களைப் பற்றித் தவறான எண்ணங்களை உண்டாக்கிடச் செய்துள்ளனர். ஆம், எழுத்து வடிவக் கதைகள் படித்தவரிடையே முஸ்லிம் களின் மீது பகையை வளர்த்ததென்றால் இந்தக் ‘கையிடு'கள் என்கின்ற விளக்கதாரிகளின் செயலால், படிக்காத சுற்றுலாப்
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/40
Appearance