32 பயணிகளிடையே அதே காரியத்தை அழுத்தமாகச் செய்யலா யிற்று. இதன் விளைவு? வெள்ளையன் வெளியேறிய பின்னரும் இந்தத் தப்புப் பிரச்சாரங்கள் நின்று நிலைத்து இந்து முஸ்லிம் களிடையே பகையை வளர்த்து ஒற்றுமையைச் சிதைத் திடலாயிற்று. இனக்கலவரங்கள் ஆங்காங்கே தோன்றி இத்தியாவின் ஸ்திரத் தன்மையை அழிக்கத் தொடங்கியுள்ளதைக் காண் கின்றோம். இந்த நிலையிலும் கூட இந்திய அரசு இவ்வித எழுத்துக்களை நாட்டின் நலன் கருதித் தடுத்திடவில்லை. ‘கையீடு’களின் தீய பிரச்சாரத்தை அடக்கிடவில்லை. இதில் கவனிக்க வேண்டிய தென்னவென்றல் முஸ்லிம்கட்கு எதிரிடையாக எழுதப்பட்டுள்ள -- எழுதப்பட்டு வருகின்ற திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் இந்திய அரசிற்குத் தெரியாம லில்லை; இவ்வெழுத்துக்கள் தீமை பயக்கக் கூடியதாகும் என்பதும் புரியாமலில்லை. 'கெயிடு'களின் தீய பிரச்சாரம் பற்றி மத்திய மாகாண அமைச்சர்கள் அறிந்திருக்காமலில்லை. ஆனால் இத் தீய செயல்களைத் தடுத்து நிறுத்துகின்ற ஆர்வம் சிறிதும் இவர்கட்கு இல்லை. ஒளரங்கஜேப் பாதுஷாவைப் பற்றி நமது பிரதமருக்குத் தெரியாதா? தெரியவில்லை என்றாலும் தெரிவிக்கின்ற நன்மனத் தார் பாராளுமன்றத்திலே இல்லையா? அண்மையில் ஒரு செய்தி படித்தோம். அதாவது திருவாளர் B. N. பாண்டே என்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஔரங்கஜேப் பாதுஷா வைப் பற்றிக் கூறியுள்ளதைப் பாருங்கள்: "நான் அலஹாபாத் பல்கலைக்கழகத் தலைவராக இருந்த போது ஸோமேஸ்வரநாத் மஹாதேவ் மத்திர் என்கின்ற ஆலயச் சொத்து பற்றிய சர்ச்சை என்னிடம் எடுத்துரைக்கப் பட்டது. அதில் ஒரு சாரார், சில பத்திரங்களைக் காட்டினார்கள். அதில் அந்த 'மந்திரு'க்கு ஔரங்கஜேப் மன்னர் வழங்கிய மான்யம் அந்த சொத்து என்பதற்கான ஃபர்மான் பிரதி இருந் தது. கோயில்களையெல்லாம் தரைமட்டமாக்கியவர் என்று
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/41
Appearance