உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 குற்றம் சாட்டப்பட்டவர், கோயிலுக்கு அளித்த மான்யம் அது என்பதை அறிந்தபோது பேராச்சரியம் அடைந்தேன். இதுபற்றி ஒருமுடிவிற்கு வருவதற்கு முன்னர் பாரசீக மொழியில் பண்டிதராக விளங்கிய ஸர் தேஜ்பகதூர் சாப்ரூ வுடன் கலந்தாலோசித்தேன். அந்தப் பெரியவர் ஜகதாம்புரி ஷிவ் மந்திர் பற்றிய எல்லாப் பத்திரங்களையும் ஆராய்ந்து பார்த்து விட்டு அந்தக் கோயிலுக்கு, ஔரங்கஜேப் மன்னர் ஜாகீர் மான்யம் கொடுத்திருக்கிறார் என்று உறுதி செய்தார். இதைப் பற்றி நான் மேலும் ஆராய முற்பட்டபோது, ஒரு புதிய ஔரங்கஜேப் மன்னர் என் கண்முன் தோன்றினார். ஷிவ் சங்கர் மந்திருக்கு மட்டுமல்ல உஜ்ஜயினிலுள்ள மஹா கலேஸ்வரர் கோயில், சித்திரக் கூடத்திலுள்ள பாலாஜி கோயில், ஷத்ரன்ஜே ஜெயின் கோயில். கௌகத்திலுள்ள அம்பராந்த் கோயில், மேலும் சீக்கியருக்குரிய பல குருத்து வாரக்கள் ஆகியவற்றிற்கு ஔரங்கஜேப் மன்னர் ஜாகீர்கள் வழங்கியிருப்பது தெரிய வந்தது. .. மெய்யென இந்துக்களின் பரம விரோதி என்று வெள்ளையர்களால் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யப்பட்டு அதுவே நம்பப்பட்ட ஒளரங்கஜேப் மன்னர் இந்து ஆலயங்கட்கு அளித் துள்ள அறக்கட்டளைகளின் பட்டியலைத் தொகுத்துரைத்த பின் னரும் அலரைப் பற்றிய தப்புப் பிரச்சாரம் நடைபெறுவதை நிறுத்துவதில் உள்ள நன்மையை எண்ணிப் பார்த்திட வில்லை. இதேபோன்ற பொய்யை மாமன்னர் திப்புசுல்தான் மீதும் கட்டிவிட்டிருக்கிறார்கள் என்பதையும் திருவாளர் பாண்டே M.P. விளக்கியுள்ளார். அதுமட்டுமின்றி சிவாஜி மன்னரிடம் முஸ்லிம் படைகளும் தளபதிகளும் இருந்ததையும் ஔரங்க ஜேப் பாதுஷாவிடம் இந்துக்களைக் கொண்ட பெரும்படை யும் தளபதிகளும் இருந்ததையும், திப்பு சுல்தானின் படை வீரர்களாக மட்டுமின்றி, அமைச்சர்களாகவும் தளபதிகளாக 3