உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வும் இருந்த உயர் ஜாதி இந்து (பிராமணர்கள்) பற்றியும் பட்டியலே தந்துள்ளார் பாண்டே எம்.பி. அவர்கள். இங்கேயும் கூட நம்மிடையே வாழுகின்ற பொள்ளாச்சி மகாலிங்கம் என்கின்ற தொழில் அதிபர் திப்புவைப் பற்றியும் வடக்கில் ஆண்ட வேறுசில முஸ்லிம் மன்னர்களைப் பற்றியும் சில புதிய தகவலை எடுத்துரைத்துள்ளார். திருப்பனந்தாள் எனும் சிற்றூரில் உள்ள சைவ மடத்தின் ஸ்தாபகரான குமரகுருபர ஸ்வாமிகள் ஔரங்கஜேப் காலத்த வராவார். இவர் 'சகலகலாவல்லிமாலை' எனத் தமிழில் ஒரு சிறு தோத்திரமாலை பாடியுள்ளார். இந்த சரஸ்வதி தோத்திர நூல் அரங்கேற்றமானது டில்லியில் ஔரங்கஜேப் மாமன்னரின் அவையில் எனக் குமரகுருபரசுவாமி அவர் களின் வரலாற்றுக் குறிப்பு கூறுகின்றது. அந்த நூலின் அரங்கேற்றம் நடந்ததின் விளைவாகக் காசியில் உள்ள குமரகுருபர சுவாமி மடத்திற்கு மடம் கட்டிக் கொள்ள இடமும் மடத்தின் நிர்வாகத்திற்கென பல ஏக்கர் நிலமும் ஔரங்கஜேப் பாதுஷாவால் மான்யம் வழங்கப் பட்டுள்ள செய்தியும் குமரகுருபரர் வரலாற்றில் உள்ளது. ஆனாலும் திட்டமிட்டுச் சில படித்த இந்துக்களால் இந்து மதப் பெரியோர்களால், இஸ்லாம் வாள்கொண்டு இங்கு பரப் பப்பட்ட தென்றும், முஸ்லிம் மன்னர்களால் இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டன வென்றும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இந்து-முஸ்லிம்களிடையே பகையை வளர்த்து விட்டு அந்தப் பகையைத் தங்கட்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு இந்தியாவை ஆண்டிருந்தனர் வெள்ளையர். அவர்கள் மூட்டி விட்ட இந்த பகையெனும் தீ அவிந்தாலன்றி இந்தியா வாழ வழியில்லை என்பதைச் சுதந்திரப் போராட்ட காலத் தலைவர்கள் உணர்ந்தே இருந்தார்கள். இதோ, இந்தியப் போராட்ட