உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 காலத்துத் தலைவர்களில் ஒருவரான ஆச்சாரிய கிருபளானி கூறுகின்றார் : ...ஒரு முஸ்லிமை வேற்றுமனிதனாக நினைக்கும் ஒரு இந்து இந்தியாவின் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பகைவனாகின்றான். இவ்வாறே ஒரு முஸ்லிம் ஒரு இந்துவைப் பற்றி நினைத்தால் அவனும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளைவித்தவனாகின்றான்...' 67 பீகார் து இப்படி ஆச்சாரிய கிருபளானி அன்று சொன்னார். அவர் மட்டிலுமன்று ; சுதந்திரத்திற்கு சுதந்திரத்திற்கு முன்னம் மாநிலத்தில் பெருமளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது அதை வெள்ளையராட்சி வேடிக்கை பார்த்திருந்ததை அறிந்த நேருஜி, பாட்னா நகர் சென்று மக்களைக் கூட்டிவைத்து “இனி யொரு முஸ்லிமைக் கொல்வதாயின் என்னை முதலில் கொன்று எனது சவத்தின் மீது ஏறிச் சென்று முஸ்லிம்களைச் கொல் லுங்கள் எனப் பகர்ந்தார் - அவ்வுரை மக்களின் மனத்தைக் கவ்விப் பற்றிற்று. தங்களின் தீச்செயலை அக்கணமே விட் டொழித்தனர். ஆனால் இன்று மாரிருக்கின்றார்கள் அவ்வாறு ரைத்து நாட்டில் முஸ்லிம்கட்கு எதிரிடையாக நடைபெறு கின்ற அராஜகத்தை அகற்றிட ? வெள்ளைக்காரன் கட்டிவிட்ட கதைகள் பொய்யானவை என எத்தனையோ தலைவர்கள் அக்காலை எடுத்தியம்பினார்கள். "இஸ்லாம் இந்து மதத்திக்கு விரோதமானதன்று" என விளக்கியும் உரைத்தார்கள். அவையெல்லாம் இன்று மறைக் கப்பட்டுவிட்டன. இந்திய அரசியல் வானில் சுடர்விட்டுப் பிரகாசித்த மாமணிகளில் ஒன்றெனத் திகழ்பவர் எம். என். ராய். வங்காளி இந்துவான இவர் ரஷ்யப் புரட்சியின் போது ஸ்டாலின், ட்ராட்ஸ்கி போன்ற தலைவர்களின் உற்ற நண்ப ராயிருந்தது மட்டுமின்றி அவர்களுடன் ஒன்றிணைற்று நின்று ரஷ்யப்புரட்சியின் வெற்றிக்கு உழைத்தவரும் ஆவார். நல்ல சிந்தனாவாதி. இவருடைய சிந்தனையை -தத்துவத்தை ராய்-