36 இசம்' என்பார்கள். நல்ல எழுத்தாளர் பல நன்நூற்களைப் படைத்தளித்துள்ளார். இவர் எழுதுகின்றார். 'புத்தமத வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவில் சமூக அரசியல் நிலைகள் சீர்கேடுற்று விட்டன. இஸ்லாம் ஓர் எளிமையான சாதனமாயிருந்தது, ஆகையால் பொதுமக்கள் தாங்களாகவே அதன்பால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து கொண்டனர்..." .. இஸ்லாத்தின் சரித்திரச் சாதனைகள்" எம். என். ராய் எழுதிய நூல் திரு.எம்.என்.ராய் அவர்கள் இஸ்லாம் இந்து மக்களைக் கவர்ந்த விதம்பற்றி மிக விரிவாகவே இந்நூலில் எழுதி யுள்ளார். இங்குள்ள வருணாச்சிரம தர்மம் என்கின்ற ஆரியக் கோட்பாடுகள் மக்களைத் தீண்டாதவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் சமூகத்தில் சரிசம அந்தஸ்துப் பெறுவ தற்குத் தகுதியற்றவர்களாகவும் ஆக்கி விட்டிருந்தது. மனிதர் யாவரும் சமமே என்கின்ற ஏற்றத் தாழ்வுகளற்ற சாதிப் பிரிவு களற்ற தன்மையுடையதாக - நடைமுறைக்கு ஏற்றதாக இஸ் லாம் இலங்குகிறது. எனவே மக்கள் அதில் அழைப்பாரின்றியே சென்று சேர்ந்து கொண்டனர் என்கிறார். அதுமட்டுமின்றி இஸ்லாமியப் பேரரசின் காலத்தே தோன்றிய இந்தியாவின் முன்னேற்றங்களை யெல்லாம் வியந்துரைக்கின்றார். இஸ்லா மியப் பேரரசு உண்மையான இந்துமதத் தத்துவங்கட்டு மாறான செயல்-எதையும் செய்திடவில்லை எனவும் விளக்கி உரைக் கின்றார். ஆனால் அந்த அரிய நூலினைப் படிக்கவே இந்துக்கள் மறுத்தார்கள். ராயைத் தங்களின் பகைவர் எனக் கருதிடவும் தவறிடவில்லை. அக்பர் பாதுஷா காலத்தில் தொடங்கி ஷாஹ்ஜஹான் காலத்தில் விரிந்து ஒளரங்கஜேப் ஆலம்கீர் ஆட்சியின் தொடக்கத்தின் பன்னிரண்டாண்டுக் காலம் வரை முஸ்லிம் களின் ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்கட்கு எதிரான செயல்கள் நமது சகோதரர்களான இந்துக்கள் சிலரால்
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/45
Appearance