உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வெல்லுதல்தல் அரிதென அறிந்து சரண் ஆனான். போர், இந்தி யாவிற்கு வெற்றியை அளித்தது. ஷாஜஹான் மட்டுலுமல்ல, மாமன்னன் பாபரும், தனது மூதாதையர்களில் நாடாகிய மத்திய ஆசிய பகுதிகளைப் போரிட்டு வென்று இந்தியாவுடன் இணைத்தவர் என்பதே வரலாறு. ‘பட்டாண்' இனத்து முஸ்லிம்கள் இங்கே ஆண்டார்கள். ஆனால் அவர்கள் நாட்டுடன் இந்தியா இணைந்திடவில்லை. இந்தியாவின் கீழ்த்தான் அவர்கள் நாடு இருந்தது. . பாரசீக முஸ்லிம்கள் இங்கே ஆண்டார்கள். ஆனால் பாரசீகத்திற்கு இந்தியாவை அவர்கள் அடிமைப்படுத்திட வில்லை. துருக்கியர்களும் கூட ஆண்டார்கள். ஆனால் அவர்கள் நாட்டின்கீழ் இந்தியாவைக் கொண்டுபோய்விடவில்லை. இஸ்லாமியப் பேரரசு இருந்த சுவடே தெரியாமல் விழுங்கிப் பூதாகாரமாக எழுந்தது மராத்தியப் பேரரசு. டில்லி பாதுஷா மராத்தியரின் கைப்பொம்மையாக அதிகாரமற்று அடக்கப்பட்டுக் கிடந்தார். மராத்தியருக்குள் ஒற்றுமை இருந்திருந்தால் -யார் ஆள்வது என்பதில் சண்டை மூண்டிடா திருந்தால் - வெள்ளையன் இந்த நாட்டை ஆண்டிருக்கவே முடியாது. மராத்தியர் தான் ஆண்டிருப்பார்கள். இந்தியா அடிமையானது யாரால்? எண்ணிப் பார்த்திட வேண்டும். மூஸ்லிம்கள் இந்தியா வின் சுயேச்சையைப் பேணியவர்கள். அடிமைத்தனத்தை அழிப்பது,ஒழிப்பது. வெறுப்பதே இஸ்லாத்தின் அடிப்படை! ஏனைய சமயங்களில் கலை, கலாச்சாரம், நாகரீகம், பண் பாடு ஆகிய அனைத்தையும் விழுங்கி, இருந்தசுவடு தெரியாமல் அழித்து விட்ட இந்திய சனாதனம், இஸ்லாத்தையும் விழுங்கிட அடிநாளிலிருந்தே முயன்று வந்ததும், வெற்றி பெற்றிட