முஸ்லிம் இந்தியா! 47 தமிழ் வேந்தன் ராஜ ரரஜ சோழனால் இந்த நாட்டினரின் வீரத்தைக் கீழ்த்திசை நாடுகள் அறிந்தன. அசோக மன்னனால் புத்தமதம் மேற்கில் ஈரான்-ஈராக் வரை பரவிற்று! கிழக்கில் சீனா முதல் ஜப்பான் வரையிலும் விரிவுற்றது. இங்கே ஆட்சி புரிந்த இஸ்லாமியர்களின் ஆட்சிப் பரப்பு சோவியத் நாட்டிலுள்ள புகாரா வரைக்கும் விரிவுற்றது! வீரத்திற்குப் பெருமை சேர்த்தான் தமிழ் மன்னன்! மதத்திற்குப் பெருமை கண்டான் பேரரசன் அசோகன்! இந்தியாவின் எல்லையை விரிவாக்கினார்கள் ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்! கஜ்னி முகமது படையெடுத்ததைப் இங்கே படித்தவர்கள், அந்தக் கஜ்னி முகம்மதின் நாட்டையும் இந்தியாவுடன் இணைத்து அதற்கப்பால் உள்ள முஸ்லிம் நாடுகளையும் வென்று இந்தியாவின் ஆதிபத்தியத்தை எல்லையை விரிவாக்கி ஆட்சி புரிந்த முஸ்லிம் பேரரசர்களை பற்றிப் படித்துப் புரிந்து போற்றியதுண்டா? ஒளரங்கஜேப் மாமன்னரின் தந்தையான ஷாஜஹான் ஆட்சிக்காலத்தில் அவர், மத்திய ஆசியாவில் உள்ள பதக் ஷான், புகாரா ஆகிய பிரதேசங்களை வென்று தன்கீழ்க் கொண்டுவர விரும்பினார். அன்று இளவரசராக இருந்த ஔரங்கஜேப் தலைமையில் படை புறப்பட்டுச் சென்றது. அவருடைய இரு சகோதரர்கள் உடன் சென்றனர். போர், கடுமையாக நடந்து கொண்டிருந்தது. தொழு கைக்கான நேரம் வந்தது. அந்தப் போர்க்களத்திலேயே-போர் நடந்துக் கொண்டிருந்த நிலையிலேயே தொழுதிடத் தொடங் கினார் ஒளரங்கஜேப். அக்காட்சியைக் கண்ட அந் நாட்டினை ஆண்டிருந்த சுல்தான் (முஸ்லிம் மன்னன்) இவரை
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/56
Appearance