46 4 சிவ வண்ணக்கத்தினருக்கும் சக்தி வணக்கத்தினருக்கும் டையில் மூண்ட, யார் பெரியவர் என்ற சண்டை, ஆப் கானிஸ்தானத்தின் அதிபதியான கஸ்னவி (கஜ்னி ) முகம்மதை இங்கே இட்டு வந்தது என்பதை அறிந்திருந்தால் பகை உணர் வைத் தூண்டுவோர் நம்மிடையே தோன்றிட முடியுமா? கே.எம்.முன்ஷி அவர்கள் எழுதியுள்ள ஜெய் சோமநாத்' எனும் நூலினைப் படித்தால் தெரியுமே, உண்மை எது? என்று. கஜ்னி முகம்மதின் சிறப்பியல்புகளை, மனிதத் தன்மையைப் பண்பாட்டுணர்வை எடுத்தியம்பும் கே.எம். முன்ஷியின் எழுத்தைப் படிப்போர் வியப்படைந்திடாதிருக்க இயலுமா? முன்ஷி இந்து அல்லவா? உண்மை உரைப்பதை மதம் தடுப் பதில்லை என்பதற்கு முன்ஷி ஓர் எடுத்துக்காட்டு. தன் நாட்டு எழுத்தாளரான அல்பைரூனியைச் சமஸ் கிருதம் படித்திட வைத்து, அவரைக் கொண்டு இந்தியத் தத்துவங்களை, வேத சாத்திரங்களை, உபநிஷத்துக்களை, பக வத் கீதையைப் பாரசீக மொழியில் எழுதச் செய்தார் கஜனி முகம்மது. அல்பைரூனி எழுதிய "கிதாபுல்ஹிந்த் எனும் நூலின் வாயிலாகத்தான் முதன் முதலில் இந்தியத் தத்து வங்கள் உலகெங்கிலும் பரவிற்று என்பது இங்குள்ளோருக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் வெள்ளைக்காரர்கட்கு நன்கு தெரியும். இந்த உண்மை வரலாறு இங்கே பரவினால் இந்தியாவை நாம் ஆளமுடியாது என்பதும் அவர்கட்குப் புரியும். எனவே சோமநாதபுர அழிவிற்குக் காரணமாக இருந்தவர்களை விட்டுவிட்டு, அதற்கு ஆயுதமாகப் பயன்பட்ட கஜ்னியை “இந்துக்களின் கோயிலை - சிலையை -அழித்தவன்; உடைத்தவன்" என்று எழுதினான்; பரப்பினான்; யாவரையும் நம்பவைத்தான். அதன்முலம் இந்தியாவை அடிமைப்படுத்தி இருநூறாண்டுகள் ஆண்டான் வெள்ளையன். இனியேனும் கஜ்னி என்பவர் யார் என்பதை அறிந்திட, அவரின் உண்மை வரலாற்றைப் படிப்போமா? இயலாவிட்டால் முன்ஷி எழுதி யுள்ள 'ஜெய் சோமநாத்'தையேனும் தொடுவேரமா?
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/55
Appearance