45 மென்றே அன்றையத் தலைவர்கள் விரும்பினார்கள். அவர் களின் அந்தப் பயனுடைய விருப்பம் வெறும் பேச்சோடும் எழுத்தோடும் நின்று விட்டது. செயல் வடிவம் பெற்றிட வில்லை. இன்றுள்ளோர்கள் இதன் விளைவு என்ன ஆகிடும் என்பதையே எண்ணிப்பார்த் திடுவதாகத்தெரியவில்லை. ஒற்றுமையை வளர்த்திடும் தன்மையில் எழுதுவோரைக் காணோம்! பகையுணர்வைத் தூண்டுகின்ற பேச்சும் செயலும் பெருகி நாளுக்கு நாள் விரிவடைவதையே பார்க்க முடிகின்றது. . இந்தியாவில் இஸ்லாம் பரவியது வாளால் அன்று ஞானவான்களின் நல்லுரைகளால் தான்' எனக் காந்திஜீயின் நண்பர் சுந்தர்லால் எழுதியுள்ளதை எடுத்துச் சொல்வோர் இல்லை. புத்தமத வீழ்ச்சிக்குப் பிறகு, மக்களிடம் அன்பு, அறம், எளிமை, பொருளாதாரச் சுபிட்சம் போன்றவை மறைந்து, சனாதன தர்மம் ஓங்கியதால் பாதிப்பிற்குள்ளான மக்கள் இஸ்லாத்தை நாடிச் செல்லலாயினர்" என்று எம். என். ராய் உரைத்திருப்பதை ஊன்றிக் கவனித்தாரில்லை. நல்லதைப் பேச வேண்டிய நாவுகள் நஞ்சை உகுக் கின்றன. ஒற்றுமையை உபதேசிக்க வேண்டியவர்கள் வளர்த்திடத் தலைப்பட்டு விட்டார்கள். பகையை நாடென்பது நாட்டு மக்கள் அனை வருக்கும் உரியதெனும் உண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டனர். . "இது நமது நாடு" என்பது போய், "எமது நாடு" என இயம்பிடத் தொடங்கி விட்டனர். ஒன்றாயிருந்த குடும்பம் இரண்டாகப் பிரிந்து விட்டாலும் இரண்டு குடும்பத்தபரும் என் என் மக்களே எனும் தந்தை உணர்வு காந்திஜீக்கு இருந்தது. அதனால் இரு குடும்ப வாழ்க்கையும் மேன்படும்; மேன்பட வேண்டும்' என்கிற எண்ணம் அந்த அண்ணலுக்கு இருந்தது. இன்றுள் ளோருக்கு?...
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/54
Appearance