44 வில்லை. நாடு விடுதலை பெற்று மொழி வழியாக மாநிலங்கள் திருத்தி அமைக்கப்பட பிறகு தங்கள் தங்கள் மாநிலங்களில் தோன்றிய தேசியத் தலைவர்கள் பற்றிய ஆராய்ச்சியும் போற்றுதலும் துவங்கியுள்ளது. கேரளத்தில் குஞ்சாலி மரைக் காயர் சாதிமத பேதமின்றித் தேசியத் தலைவராக ஒப்புக் கொள்ளப் படுகிறார். இவரைக் 05 கொள்ளையன், கொலை காரன். இந்து மன்னனின் பகைவன்* என்றெல்லாம் வெள்ளையரரசு வருணித்தெழுதியுள்ளது. இதே போன்று. கன்னட . நாட்டில் திப்புசுல்தான் கன்னட நாட்டின் தேசியத் தலைவராக அம்மாநிலத்தின் மக்கள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளார். திப்புசுல்தானுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதிலும் அவர் பற்றிச் செய்திப் படம் தயாரிப் பதிலும் கன்னட நாட்டரசு முனைப்பாகி உளது. ஆனால் அவரைப் பற்றித்தான் எத்தனையெத்தனை அவதூறுக் கற்பனைக் கதைகள்..? D மழைவிட்டும் துவானம் விடவில்லை' என்பதையொப்ப வெள்ளையராட்சி வெளியேறிய பின்பும் அவர்கள் சிருஷ்டித்து விட்டுச்சென்ற "இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானது என்கின்ற 'பூதம்' அகன்றபாடில்லை; அகற்றுவதிலும் நம் அரசாங்கம் போதிய கவனம் செலுத்துவதாயில்லை, செலுத் திட வேண்டும். அரசியல், சமூகம், இலக்கியம், கலை, வரலாறு, சமயங்கள் போன்ற எதிலுமே கடந்த இரு நூற்றாண்டுகளாக உண்மையை அறிந்திடும் வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. பொய் யும் புனைந்துரைகளுமே பரப்பப்பட்டுள்ளன. இதன் காரண மாக இந்நாட்டிற்கு உரியவர்களாகவுள்ள மிகப்பெரிய இரு சமயத்தினரிடையே பகையுணர்வு வளர்ந்துவரக் காண்கிறோம். அன்னியன் ஆட்சி அகன்ற பிறகேனும் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என எண்ணினோம். ஏற்படுத்திட வேண்டு
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/53
Appearance