43 வர்க்னெக் கொண்டு, யாவரும் ஒற் ஒற்றுமையாகப் பகைப் பின்றி வாழவேண்டும் என்பதே இஸ்லாமியத்தின் அடிப் படைக் கொள்கை. இந்தியாவை ஆண்ட எல்லா முஸ்லிம் மன்னர்களுமே இந்த நெறி நிறைவேற்றியவரேயாவர். இது மீண்டும் இந்தியர் அனைவரும் நினைவில் கொள்ளத்தக்கது. இங்கு ஆட்சி புரிந்த முஸ்லிம் மன்னர்களில் யார் ஒருவரும் இந்துக்களுக்கு விரோதமான செயலைச் செய்ததில்லை என்ப தொப்ப - இந்து மன்னர்களும் இஸ்லாமியர்கட்கு விரோதி யாக இருந்திடவில்லை. "இந்த நாளில் ஔரங்கஜேப் கசப்பான முறையில் விமர்சிக்கப்படுகிறார். ஆங்கில வரலாற்றாசிரியர்கள் அவர் மீது "இந்துக்களின் பகைவர்" எனும் முத்திரையைப் பதித்து விட்டனர். ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. ஓளரங்கஜேப் ஆட்சியில் ஹிந்துக்களுக்கு மன்ஸப், ஜாகீர். ஜமீன்தார் ஆகிய பதவிகள் கொடுக்கப்பட்டன. ஔரங்க ஜேப் ஹிந்துக்களை கவர்னர் ஆகவும் கவர்னர் ஜெனரலாகவும் வைஸ்ராயாகவும், சேனைத் தளபதிகளாகவும் தலைமைச் சேனாதிபதியாகவும் நியமித்தார். ஆப்கானிஸ்தான் எனும் ஒரு முஸ்லிம் நாட்டை ஒரு ஹிந்து ராஜபுத்திர வைஸ்ராயின் கீழ் ஆட்சி நடத்த வைத்தார். அவர் சிவாஜியுடன் புரிந்த போர், மத அடிப்படையில் நடந்ததல்ல. முழுக்க முழுக்க அரசியல் காரணமேயாகும்' இவ்வாறாக 5-10-75 ம் தேசிய" இல்லஸ்ட்ரேடட்' எனும் பிரபல ஆங்கில வார ஏட்டில் ஆச்சாரியா பிரபுல்ல சந்திர ராய் என்னும் பிரபல தேசியத் தலைவர் குறிக்கின்றார். ஆனால் நமது நாட்டிலுள்ள இந்திய மொழிப் பத்திரிகைகளில் இது போன்ற செய்திகள் அதிகம் இடம் பெறுவதில்லை. தலைமுறை மா றிவருகிறது. முந்திய கற்பனைப் புனைந்துரைப் பொய்களை இக்கால இளைஞர்கள் ஏற்கத் தயாரில்லை என்பதை இவ்விதழ் களின் ஆசிரியர்களோ கட்டுரையாளர்களோ அறிந்திருக்க
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/52
Appearance