42 இந்த நிகழ்வு இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இதர மார்க்கத் தினரும் பூரண மத உரிமையுடன் வாழ்ந்ததைத் தெளிவு படுத்தப் போதுமான தாயுள்ளது. இதுபோன்ற எத்தனையோ நிகழ்வுகள். "இஸ்லாத்தை ஏற்பதில் கட்டாயமில்லை" என்கின்றது குர்ஆன் வாசகம். அவ்வாசகத்தை மெய்யாக்கிக் காட்டுவதே- காட்டியதே இஸ்லாமிய ஆட்சி. இந்தியாவிலும் இந்தமுறை முற்றிலுமாகக் கடைப் பிடிக்கப்பட்டுள்ள தென்பதே வரலாறு. ஆனால் நம்மை இருநூறாண்டாக ஆண்டு ருசிகண்ட வெள்ளையர், இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிளவுபடுத்தி அவர்கட்கு இடையேயுள்ள ஒற்றுமையைச் சிதைத்தாலன்றி இந்த நாட்டை ஆளமுடியாதெனக் கண்டனர். எனவே கடைசி வரை இந்து - முஸ்லிம்களைப் பிளவுபடுத்துவதையே வேலையாகக் கொண்டனர். அவர்கள் எண்ணத்தில் செயலில் வெற்றியும் கண்டனர். அவர்களின் செயல்தான், பிற மத சுதந்திரத்தையும் பாதுகாத்தலே மன்னராகிய தனது கடமை என வாழ்ந்த ஔரங்கஜேப் மாமன்னரையே இந்துக் களின் பரம விரோதி என எழுதவைத்தது. 'ஒரு பொய்யை திரும்பத் திரும்பச்சொன்னால் அதுவே மெய்யாகிவிடுகிறது" என்கின்ற தத்துவப்படி வெள்ளையர்கள் தாங்கள் எழுதிய தோடன்றி தங்கள் தயவினை எதிர் பார்க்கின்ற இந்திய வர லாற்றாசிரியர்களையும் கொண்டு எழுதப் பணிந்துள்ளனர். இந்துமக்களும் மதித்துப் போற்றுகின்ற மாமன்னர்களாக விளங்கிய முஸ்லிம் மன்னர்களைத் தாங்கள் ஒழித்துக் கட்டியது சரியே என இந்தியாவின் பெரும்பான்மை மக்களாகிய இந்துக் களை நம்பவைத்தால் அவர்கள் ஆதரவைக் கொண்டே இந்தி யாவை என்றென்றும் ஆண்டு விடமுடியும் என்கின்ற நினைப் பில் வெள்ளையர் வேண்டுமென்றே கட்டிவிட்ட கதைகளேயன்றி உண்மையில் இஸ்லாமியமோ இஸ்லாமியப் பேரரசர்களோ இந்துக்களுக்கோ இந்து சமயத்திற்கோ பகையாக இல்லை. இந்துக்களிடம் மட்டுமின்றி ஏனைய எந்த ஒரு சமயத்திற்கும் பகையானதுதன்று இஸ்லாம். அவரவர் கொள்கை அவர
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/51
Appearance