41 பொதுமக்கள் முன்னிலையில் தனது மூக்கினை அரிந்து கொள்ள வேண்டியது" 66 எனக் கண்டிருந்தது. குற்றவாளி முன்னிலும் அதிக அக்கறையுடன் தேடப்பட்டான். கிட்டிட வில்லை. எனவே 'குற்றவாளிக்குப் பதிலாக ஆளுநரே தனது மூக்கினை இன்ன இடத்தில், இந்த நேரத்தில் அரிந்து கொள்வார்" என நகர் முற்றிலும் அறிவிப்புச் செய்யப்பட்டது. திரண் குறித்த நாளில் குறித்த இடத்திற்கு ஆளுநர் வந்தார். அவர் வந்திடற்கு முன்னரே மக்கள் வெள்ளம் டிருந்தது. மேடையின் மீது ஏறி, தனது உடை வாளிளை எடுத்து ஆளுநர் தனது மூக்கினை அரிந்து கொள்ளத் தயாரானார். அதுபோது கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஒருவன் ஆளுநர் அருகே வந்தான். அவன் கண்கள் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தன. 68 ஆளுநர் அவர்களே! நான் தான் அச்சிலையின் மூக்கினைச் சிதைத்தவன். தங்கள் மூக்கை அரிந்திட வேண்டாம். என் மூக்கை அரிந்திடுங்கள்" எனக் கூறினான். மேடை மீது தனதருகே கண்ணீர் மல்கி நின்ற அவன் தன் மூக்கினை அரிந்திடத் தனது வாளை அவன்பால் கொண்டே கினார் ஆளுநர். அருகே வீற்றிருந்த பாதிரிமார்கள் எழுந்த னர். "ஆளுநர் அவர்களே, உங்களுடைய நீதி குற்றவாளி யைத் திருத்தி இருக்கிறது. அவன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு, தண்டனையையும் ஏற்றுக் கொள்ளுமாறு செய் துள்ளது. எனவே உங்கள் (இஸ்லாமிய) ஆட்சியை அதனு டைய சமநீதித் தன்மையை உணர்ந்த நாங்கள் குற்ற வாளியை மன்னிக்கிறோம். எங்கள் சிலையை முன்போன்று செப்பன் செய்து தருதலே போதும்” எனப் புகன்றனர்.
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/50
Appearance