இஸ்லாம் இவ்வழிக்கு 40 மாறுபட்டது என்பதை நாம் குறிக்க வேண்டியதில்லை. "இஸ்லாமிய அரசு துவங்கிய நாடுகளில் வாழ்ந்த இதர மதத்தாரின் மீது தலைவரி (ஜிஸ்யா) விதிக்கப்பட்டது" என பிறசமய வரலாற்றாளர்கள் குறிப்பதே இதற்குச் சான்றாகும். அதாவது இதா மதத்தினர்கள் இஸ் லாமிய அரசின் கீழ் மத உரிமையுடன் வாழ்ந்திருந்தனர் என்பதற்கு "தலைவரித் தாக்கு' எழுத்துக்களே சான்றாகின்ற தென்பதாம். இதுபற்றி ஒரு நிகழ்ச்சி: சி.பி ஏழாம் நூற்றாண்டில், அதாவது ஹலரத் உமறிப் னுகத்தாப் (ரலி) கிலாபத்தின் போது அவர் ஆளுகையின் கீழ் ஆசியாமைனர்ப் பகுதி வந்தது. அங்கு ஒரு இஸ்லாமிய ஆளுநர் இருந்து அப்பகுதியை நிர்வகித்து வந்தார். தலை நகரில் அங்கு வாழ்ந்த கிறித்துவர்கள் ஏசுநாதர் சிலை ஒன்றினை நிறுவியிருந்தனர். அச்சிலையின் மூக்கினை யாரோ ஒருவன் ஒரு நாள் நள்ளிரவில் சேதப் படுத்திவிட்டான். கிறித்து வர்கள் ஆளுநரிடம் முறையிட்டனர். அவர் நட்டயீடு தருவ தாகவும் வேறு சிலை நிறுவிக்கொள்ளுமாறும் கூறினார். கிறித்துவர்கள் சம்மதிக்கவில்லை. சிலையின் மூக்கைச் சேதப் படுத்தியவனின் மூக்கை அரிந்திட வேண்டும் என வலியுறுத்தி னர். ஆளுநர் ஒப்புக் கொண்டார். என்ன முயன்றும் சிலையின் மூக்கினைச் சேதப்படுத்தியோனைக் கண்டு பிடித்திட இயல வில்லை. ஆளுநர் கிறித்துவப் பாதிரிமார்களை அழைத்துப் பேசினார். குற்றவாளியைக் கண்டு பிடித்திட இயலவில்லை என்றார். அவர்கள் வேறு எந்த எந்த விதத்திலும் சமாதானம் ஆகிவிடவில்லை. இந்த நிலையை விளக்கி ஆளுநர் மதினா மா நகருக்கு-கலீபா உமறுப்னு கத்தாப் (ரலி) அவர்கட்கு எழுதினார். அங்கிருந்து தாமதமின்றி உடன் பதில் வந்தது. பதில்:- 66 . "குற்றவாளியைக் கண்டுபிடித்து அவன் மூக்கை அரிந் திட வேண்டியது ஆளுநரின் கடமை! தவறினால், குற்றவாளி யைக் கண்டு பிடித்திட இயல வில்லை என்றால் ஆளுநரே
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/49
Appearance