தாமளித்த அறக்கட்டளையின் அடியில் 'ஆலம்கீர்' குறிக்கச் செய்துள்ள அரிய வாசகம், 64 'இந்து மன்னர் சிவாஜி, முஸ்லிம்களுக்குப் பெரிய பொறுப்புகளை நிர்வகிக்கக் கொடுத்தார்." 46 "முஸ்லிம் மன்னர் ஒளரங்கஜேப் இந்துக்களுக்குப் பெரிய பெரிய நிர்வாகப் பொறுப்புகளைக் கொடுத்தார்.!" ஆனால்- இந்துக்களையும் முஸ்லிம்களையும் வேறுபடுத்தி விஷத் தைத் தூவி தன் ஆட்சியை நிலைநிறுத்த வெள்ளையர்கள் சூழ்ச்சி செய்து-அதில் வெற்றியும் பெற்றனர். அது இந்த தலைமுறையிலும் தொடரலாமா? மதத்தைப் பரப்புவதற்கான அமைப்புகள் கிறித்துவர்க்கு இருக்கிறதென்றால், பண்டைய வட இந்தியாவில் இந்த முறை இயங்கிய வரலாறு உண்டு. ஆம். இந்திய எல்லையைக் கட . ந்து பாரசீகம் (ஈரான்). ஈராக் வரையிலும் புத்தமதம் பர விட வழிவகுத்தவன் அசோக மன்னன். அங்கு மட்டிலுமன்று சீனா. ஜப்பான், பர்மா போன்ற நாடுகளிலெல்லாம் புத்த மதம் பரவிட வழி கண்டவனும் அவனே. அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகள் அனைத்திலும் புத்த மதத்தைப் பரப் பிட அவன் தவறிடவில்லை. மன்னன் மதம் எதுவோ அதுவே மக்களின் மதமாகவும் இருந்த நெடிய வரலாறு பண்டைய இந்தியாவில் மட்டுமின்றி ஏனைய நாடுகளிலும் இருந்து வந்ததென்பதே வரலாறு. பண்டையத் தமிழகமும் இதற்கு விதிவிலக்கன்று. ஐரோப்பா கண்டத்தில் வெஸ்ட் பாலியா (WEST PHALIA) உடன்படிக்கை ஏற்படும் வரையில் (கி.பி.648) மன்னன் மதம் எதுவோ அதுவே மக்கள் மதமாகவும் இருந்து வந்ததாக வரலாறு. இங்கிலாந்தில் எலிசபெத் ராணி காலத் தில் ப்ராடஸ்தந்து மதம் அயர்லாந்து மக்கள் மீது பலவந்த மாகத் திணிக்கப்பட்டது.
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/48
Appearance