உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இந்த அறிவிப்பு பற்றி ஒளரங்கஜேப் மாமன்னர் தந் துள்ள விளக்கம் காசிமாநகர் ஆலயத்திற்கு அவர் அளித்துள்ள அறக் கட்டளை ஒன்றின் அடியில் குறிக்கப்பட்டுள்ளது அவர் தம் உத்திரவுப்படி. அவ்வாசகமாவது-: "பிற சமயத்தாரின் வணக்கத் தலங்களைப் பாதுகாப்பதில் உயிர்த் தியாகம் புரிந்திடவும் முஸ்லிம் தயாராக இருக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை..."

  • மற்ற சமயத்தாரின் ஆலயங்களையும் பராமரிப்பதற்காக

முஸ்லிம் மன்னர்கள் உதவிட வேண்டும்..." காசி ஆலயத்திற்கு ஔரங்கஜேப் மாமன்னர் வழங்கி யுள்ள அறக்கட்டளையின் அடியில் குறிக்கப்பட்டுள்ள இவ்வரிய குறிப்பினையொப்ப ஒரு குறிப்பினை உலகில் தோன்றிய இஸ் லாம் அல்லாத எச்சமயம் சார்ந்த மன்னரும் வெளியிட்டுள்ள தாக அறிந்திட இயலவில்லை. ஆனால், இத்தகு உயரிய பண்பா டுடைய நடுநிலை தவறா மாமன்னரான அவரைத்தான் "இந்து ஆலயங்களை இடித்தவர்" எனப் பொய்ப் பிரச்சாரம் செய்து அதையே உண்மையெனப் பாமரமக்களை மட்டுமின்றிப் படித்த மக்களையும் நம்பவைத்துள்ளது, வல்லமை மிக்க வெள்ளையர் ஆட்சி! பொய்யுடையொருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே, மெய் போலும்மே என்பது முது மொழி யல்லவா? தனது குடிபடைகளிடத்தே சமய பேதம் காட்டாமல் நடு நிலையோடு நடந்து கொண்டவர் ஔரங்கஜேப் மாமன்னர். இவ்வாறு அவர் நடந்து கொள்ள அவரைப் பக்குவப் படுத் தியது அவர் கற்றிருந்த திருக்குர்ஆன் எனும் மாமறையின் வாசகங்களே என்பது மெய்மையினும் மெய்மையாம். ஆம். திருக்குர்ஆன் தந்துள்ள செவ்விய வாசகங்களுள் ஒன்று:- உங்கள் வழி உங்களுக்கு எம் வழி எமக்கு... என்கின்ற கருத்துடையதாகும். இவ்வரிய வாசகத்தை நினைவு படுத்துவதே, நினைவு கூர்த்துவதே சாசி ஆலயத்திற்குத்