உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 50 நாட்டின் வரலாற்றையும் இந்தியாவின் முஸ்லிம் ஆட்கிக்கால நில வரலாற்றையும் படித்தோர்-அல்லது படிப்போர் காண முடியும். ஒன்றினை இங்கு நினைவு படுத்துகிறேன். அதாவது இஸ்லாமிய அரசு இந்தியாவில் துவக்கமாகிடும் முன்னரே இஸ்லாமிய ஞானிகள் இந்தியாவிற்கு வந்து விட்டனர் என்பதை சாதாரண அறிவு படைத்தோரும் ஒப்புவர். அவர்கள் இங்கே சமயப் பிரச்சாரம் செய்திட வந்தவர்கள் அன்று. அவர்கள் நாட்டிலே ஏற்பட்ட குழம்பங்களின் போது அமைதி கருதி இங்கு வந்தோர் ஆவர். அவர்கள் இங்கு வந்த காலை நாட்டு மக்கள் மட்டுமின்றி நாடாளும் மன்னர் களும் அவர்களை ஆதரித்தனர். அவர்கள் யாரையும் நாடிச் சென்றதாக வரலாறில்லை, அவர்களை நாடித்தான் மக்களும் மன்னர்களும் சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்த ஒழுக்கத் தன்மை, மனிதப்பண்பு, எளிமை. தூய்மை. இறைநம்பிக்கை, தொழுகை, மறைஓதல் போன்ற சிறப்பியல்புகள் மக்களைக் கவர்ந்தன. எனவே, இங்குள்ளோர்களில் பலர் இஸ்லாமை வலிந்து தழுவிடலாயினர். அந்த மெஞ்ஞானிகள் பீடம் அமைந்திருக்கவில்லை. பிரச்சாரத்திற்கென சீடர்களை வைத்திருக்கவில்லை. இஸ்லா மியர் ஆட்சி இங்கு நிலை பெற்ற பின்னரும் கூட இஸ்லாமியப் பிரச்சார அமைப்பு என்பது ஏற்பட்டிருக்கவில்லை. மாறாக இந்து சமய மடங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. புராணப் பிரசங்கங்கள் கதாகாலட்சேபங்கள், தேர்த்திரு விழாக்கள் போன்ற அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி நடை பெற்றிடவே செய்தன. இவற்றை எந்த ஒரு முஸ்லிமும் தடை செய்திடவில்லை. இவற்றிக்குச் சான்று எங்கேயும் சென்று தேடிட வேண்டியதில்லை. இங்குள்ள ஆலயங்களும் அவற்றின் நித்திய வழிபாடுகளுமே மெய்ப்பிக்கும். இவ்வாலயங்கட்கும் அவற்றின் வழிபாட்டிற்குமென முஸ்லிம் மன்னர்கள் வழங்கும் மானியங்களும் மெய்ப்பித்திடும். இஸ்லாமியராட்சி இங்கு நடந்து கொண்டிருந்த காலத்தே இதர மதங்களின் சமயப் பிரச்சாரம் தடை செய்யப்பட்டிருக்க