உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய்வு • 51 தொல் பொருள் 8437 வில்லை என்பதற்குச் சான்று பகர்வனவாக நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்ற சங்கரர் மடங்கள், ஜீயங்டங்கள்; சைவச் சமய மடங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆம், இந்த மடங்களைச் செயலற்றிடும்படி எந்த முஸ்லிம் மன்னனும் செய் திருந்ததாகச் செய்தியில்லை. மாறாக மடங்கட்கு மானியம் வழங்கி ஆதரித்ததே வரலாறு! புதிய மடங்கள் தோன்றிட உதவியதே சரிதம். மடலாயத்தில் உள்ள அவர்கள் பூஜிக் கின்ற தங்க விக்ரகங்களை இந்து மன்னர்கள் திருடிச் சென்ற போது அவற்றை மீட்டு உரிய இடத்தில் சேர்ப்பித்ததே இஸ் லாமிய மன்னர்களின் வரலாறு. ஆய்ந்தறிந்தால், வெள்ளையர் கட்டிய-கட்டிவிடச் செய்த பொய்க் கதைகளைமறந்து சுயச் சிந்தனை கொண்டு நோக்கினால் பிரகாசமாக இந்த உண்மை துலங்கும். காசியில் உள்ள குமரகுருபரர் மடம் ஔரங்கஜேப் மன்னர் வழங்கிய நிலத்தில்--உதவிய பணத்தில் உருவானது என்கின்ற உண்மையை ஞானச் செம்மல், குமர குருபரரின் சரிதம் படித் தோர் அறிவர். இது இஸ்லாமியராட்சி தோன்றிய பின்னர் ஏற்பட்ட புதிய மடமன்றோ? சிருங்கேரி மடத்தில் இருந்த தங்கத்தினாலான பூஜை விக்கிரகத்தை மராத்திய இந்துப் படையினர் கவர்ந்து சென் றதை மீட்டளித்தவர் திப்பு சுல்தான் என்பதை அந்த மடத் தின் வரலாறு பகருமே! "சிருங்கேரி மடத்திலிருந்த சாரதா தேவியின் பெரிய தங்க விக்கிரத்தைக் கவர்ந்து சென்ற மராட்டியருடன் திப்பு சுல்தான் போராடி, விக்கிரகத்தை மீட்டுவந்து, மடத்தில் ஸ்தாபிப்பதற்கான செலவுகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு உதவினான்". -பார்க்க, டணாயக்கன் கோட்டை பாலகிருஷ்ண நாயுடு எழுதிய வரலாற்று நவீனம் பக்கம் 534.