உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிருங்கேரிமடம் ஜகத்குரு ஸ்ரீசச்சிதானந்த பாரதி ஸ்வாமி யோடு (திப்பு சுல்தான்) கன்னட மொழியில் கடிதப் போக்கு வரத்து வைத்துக் கொண்டிருந்தான். ஜகத்குருவுக்குத் திப்பு சுல்தான் எழுதியுள்ள 21 கடிதங்கள் அச்சாகியுள்ளன. ஷை நூல் ஷை பக்கம் இவை போன்ற ஆயிரமாயிரம் உண்மை வரலாறு உண்டு. இவை அனைத்தும் உணர்த்தும் உண்மை, இஸ்லாமியர் ஆட்சியில், இந்து மதமோ வேறு எந்த மதமோ தங்கள் மத ஆச்சாரப்படி வாழ்வதை, ஆலயங்கள் அமைத்து தாங்கள் விரும்பும் வகையில் வழிபாடு நடத்துவதை, மதப்பிரச்சாரங்கள் புரிவதை எந்த முஸ்லிம் அரசும் தடுத்திடவில்லை என்பதுதான். இன்னொன்றையும் இங்கு நோக்குதல் பயனுடையதாகும். இன்று இந்தியாவில் நடைபெறுகின்ற மதச்சார்பற்ற ஆட்சி என்பது இஸ்லாமியப் பேரரசுகள் இங்கு நடந்தக்காலை, மரபு வழியாக இஸ்லாமிய அரசு பின் பற்றிய நெறியேயாகும். அதேபோன்று அன்றிங்கு நிலவிய இந்து மன்னர்கள் அனை வரும் பின்பற்றிய நெறி என்றும்கூட இதைச் சொல்லிட இயலும். வெள்ளையராட்சி துவங்கிடும் முன்னர் இந்து மன்னர் கட்கும் இஸ்லாமிய மன்னர்கட்குமிடையேயன்றி,கிராம நகர மக்களிடையே சமயச் சண்டைகள் நடந்ததென்பதாகச் சான்று உண்டா? இருந்தது என்றால் அது வெள்ளையன் கட்டிவிட்ட கதையேயன்றி உண்மையல்லவே. உண்மையைச் சொல்வதென்றால், இஸ்லாமியம் இங்கு கால் ஊன்றுவதற்கு முன்னம் சைவ- வைணவச் சண்டைகள் உண்டு. வைதீக மதங்கட்கும் புத்த சமயத்திற்கும் கருத்துப்போர், சமயப் பூசல்கள் உண்டு, உண்டு! சமணமும் சைவமும் மோதிக்கொண்ட வரலாறு பிரசித்தம் வரலாற்றை ஊன்றிப் படித்தால் தெரியும்; இஸ்லாம் இங்கு கால்ஊன்றிய பின்னர் வெள்ளையராட்சி தோன்றிடும்