உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வரையில் இங்கே சமயச் சண்டைகள் இந்து முஸ்லிம்களிடையே மட்டுமின்றி, இங்கிருந்த வேறு எந்தச் சமயத்தாரிடையேயும் நிகழ்ந்திடவில்லை! இது பொய்யுமன்று, புனைந்துரையுமன்று உண்மை, மெய்மை வாய்மையோடியைந்த சத்தியம் ஆகும். ஆய்க, ஆய்ந்து தெளிந்திடுக! உ "வெள்ளைத்துரைமார்களே! நீங்கள் மைசூர் ராச்சியமெல் லாம் திரிந்து ஊர் ஊராக, ஆண் பெண் அனைவரையும் விசாரித் துப் பாருங்கள். ராமராச்சியம் நடத்திய தெய்வீக மன்னன் திப்புசுல்தான்பகதூர் அவர்களுடைய குடும்பத்தார்தான் தொடர்ந்து எங்களை ஆளவேண்டும் என்று ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லாக் குடிமக்களும் சொல்வார்கள்"... இது திப்பு சுல்தான் வாரிசுகட்கே அரசுரிமை வழங்குதல் வேண்டுமென பூரணையா எனும் பிராமணர் (திப்புவின் திவான்) வெள்ளையரிடம் செய்த விண்ணப்பம். “பார்க்க, 'டணாய்க்கன் கோட்டை' எனும் வரலாற்று நவீனம் பக்கம் 533 திப்புவின் சவ ஊர்வலம் சென்ற வழி நெடுகிலும் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு நின்று ஆண்களும் பெண்களும் வாய்விட்டு அழுதார்கள். மார்பில் அறைந்து கொண்டார்கள். ஊர்வலத்தின்முன்பு விழுந்து புரண்டார்கள்..." —‘சந்திரநாத்' ஜூலை 1983ல் ஓம்சக்தி எனும் திங்கள் ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து. மைசூர் "ராச்சியத்தில் உள்ள எல்லா ஆலயங்களிலும் திப்புசுல்தானின் வெற்றிக்காக விசேஷ பூஜை நடத்தப் பட்டது" 6 “நூற்றுக்கணக்கான பிராமணர்கள் (திப்புவின் வெற்றிக் காக) ஹோமம் வளர்த்து மந்திரங்களை ஜெபித்துக் கொண்டி ருந்தார்கள்.”