உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பார்க்க 'டணாய்க்கன் கோட்டை வரலாற்று நவீனம் பக்கம் 536. இத்தகு சிறப்புடைய மன்னன், ராமராச்சியம் நடத்திய வன் என்று இந்துக்கள் வாயாலேயே புகழப்பட்ட திப்புசுல் தானையொப்ப வேறு எந்த இந்து மன்னனாவது புகழப் பட்ட துண்டா? ஆனால் இந்த அரிய மன்னனைப் பற்றி வெள்ளையர்கள் கட்டிவிட்ட கதை என்ன? இந்துக் கோயில்களை இடித்தான், இந்துக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றினான். பிராமணர் களைக் கொன்றான். 990 "திப்புசுல்தான் 3000 பிராமணர்களை இஸ்லாத்தில் கட்டாய மத மாற்றம் செய்திட முயற்சித்தபோது அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டார்கள்..." 0.3 - மஹா மஹோபாத்யாய டாக்டர் ஹர்பிரசரத் சாஸ்திரி கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதத் துறைத்தலைவர். இந்த விரோதக் கற்பனைக் கதையைப் படித்து ஆச்சரியம் அடைந்ததாக நமது பாராளுமன்றத்தின் உறுப்பினர் திரு.B.N. பாண்டே என்பவர் வியந்து பார்லிமெண்டிலேயே உரை நிகழ்த்தியுள்ளார். மட்டுமின்றி, "இந்தப் பொய்க்கதை இன்னமும் (1972) உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஜூனியர் ஹைஸ்கூல் மாணவர்கட்கான பாடநூலில் எழுதப்பட்டிருப்ப தைக் கண்டேன்" என்றும், இதுபோன்ற சமூக தேசவிரோதப் பொய்க்கதைகளைப் பாட நூற்களில் சேர்த்திடலாமா? அதுவும் சுதந்திர நாட்டில் இருக்கலாமா? இது, ஒற்றுமையைச் சிதைக் காதா? பகையை வளர்க்காதா?" என்றெல்லாம் கேள்விக்கணை (நாடாளுமன்றத்தில்) எழுப்பியுள்ளார். திரு டாக்டர் ஹர்பிரசாத் சாஸ்திரியார் கற்ற மாமேதை, பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதத் துறையின் தலைவர். அவரே வெள்ளையன் கட்டிவிட்டுள்ள இப்பொய்க்கதையை மெய்யென நம்புகிறார் என்றால், சாதாரண மக்களின் நிலை எவ்வாறிருக்கும். ஆனால் இது போன்ற சமூக விரோத எழுத்துக்களை எழுதுகின்ற