உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பழக்கம் எந்த ஒரு முஸ்லிமிடமாவது உண்டா? முஸ்லிம்கள் ஆட்சி நடந்த காலத்திலேயேனும் உண்டா? பிறமதத்தை இழித்தும் பழித்தும் தூஷித்திடல் கூடாது என்பது இஸ்லாமிய நெறி. மதவிஷயத்தில் கட்டாயம் கூடாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் போதனை-திருக்குர்ஆனின் வாக்கு! சமயப் பிரச்சாரத்திற்கென இஸ்லாமியர்களிடையே அன்றும் சரி, இன்றும் சரி எந்தவித அமைப்பும் இல்லை. நெறி கடந்த பேச்சாளரோ, நேர்மைக்குப் புறம்பான எழுத்தாளர்களோ இஸ்லாமியரிடையே இல்லவே இல்லை. இஸ்லாத்தைத் தாக்கிப் பேசுவோர், எழுதுவோர், வெள்ளையராட்சியில் ஊக்குவிக்கப்பட்டனர். இன்றும் சுதந்திர இந்தியாவிலும் அந்த நிலை தொடர்கின்றது. சாதாரணமாக அல்ல, கன கடூரமாகத் தொடர்கின்றதே. இஸ்லாமியர்களை வெறுப்போர், பகைப்போர், குறை கூறு வோர் போன்ற யாவருமே தாங்களாகச் சிந்தித்து உண்மை எதுவெனக் கண்டோரன்று. அதனால் தான் அவர்கள் திட்ட வட்டமாகக் காரணம் காட்டி தங்கள் கூற்றிற்கான ஆதாரங் களை முன்வைத்து மொழிவதில்லை. யாரோ சொன்னதை நம்பி எவனோ வேண்டுமென்று இட்டுக் கட்டி எழுதி வைத்ததைப் படித்து விட்டுக் கூறுவதே தொழிலாகக் கொண்டுள்ளனர். இதற்குச் சான்றாவது, கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் சமஸ் கிருதத் துறைத் தலைவரான மஹா மஹோபாத்யாய டாக்டர் ஹர்பிரசாத் சாஸ்திரி அவர்கள் எழுதியுள்ள பள்ளிக்கூடப் பாடநூல். 3000 பிராமணர்கள், திப்புசுல்தானின் கட்டாய மத மாற்றத்திற்கஞ்சித் தீக்குளித்தனர்” என இவர் எழுதி யிருப்பது கற்பனை; ஆதாரமற்றது; மெய்பிக்க இயலா ஒன்று.

  • நான் கேட்டபோது இதற்கான சரியான ஆதாரத்தை