உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அவரால் தந்திட இயலவில்லை" என்கிறார். தனது பாராளு மன்ற உரையிலே திரு பாண்டே எம்.பி.! ஆதாரமில்லாத ஒன்றை உண்மை என்று நம்பி இவரால் எப்படி எழுதிட முடிந்தது? வெள்ளையன் கட்டிவிட்ட பொய்க் கதையை உண்மை என நம்புகிறார் திரு ஹர்பிரசாத் சாஸ்திரி! காரண காரியம் இன்றியே அவர் இஸ்லாத்தின்பால் பகை கொண்டு விட்டார். பகைமனம் உண்மையை அறிந்திட இப்படி நடந்திருக்குமா என எண்ணிப் பார்த்திட மறுப்பது இயற்கை தானே? இப்பொய்க் கதையைப் போன்றதுதான் முஸ்லிம் வேந் தர்கள் கோயில்களை இடித்தார்கள் என்பதும், கோயில்களில் உள்ள தெய்வப் படிவங்களை எடுத்துச் சென்றார்கள் என்பதும். இவை எங்கே நடந்தது? எப்பொழுது நடந்தது? எந்த முஸ்லிம் மன்னன் இப்படி நடத்தினான்.? என ஆதாரத்துடன் கூறச் சொன்னால் கூறிட இயலாது. நிச்சயமாக இயலாது. ஆனால் இதுவும் சிந்திப்பின்றி, வெள்ளையன் கட்டி விட்ட கதை களை நம்பி, சுயச் சிந்தனை இல்லாத தன்மையில் கூறப்படு வதேயாம். உதாரணமாக-- டில்லியிலே முஸ்லிம் ஆட்சி நடந்தது. ஒரு தலைமுறை யல்ல, பல தலைமுறை நடந்தது. டில்லிக்கு அண்மையில் தானே பனாரஸ் என்கின்ற காசி இருக்கிறது? காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம் எப்பொழுது கட்டப்பட்டது? சிலை எப் பொழுது செய்யப்பட்டது? இரண்டுமே தொன்மையான தென்றால் பிறகு எந்தக் கோயிலை முஸ்லிம் மன்னர்கள் இடித் தார்கள்? எந்தக் கோயிலில் உள்ள சிலையைத் தூக்கிச் சென்றார்கள்? காசி விஸ்வநாதர் ஆலயம் மட்டுமல்ல, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் எல்லைப்புற மாகாணத்திலிருந்து கிழக்கு வங்கம் முடிய இந்தப்பரந்த இந்தியா முழுவதும் உள்ள கோயில்களும் கோயில்களில் உள்ள சிலைகளும் தொன்மையான