57 வைதான். இந் நிலப்பரப்பைப் பல் பகுப்புக்களாகவும் ஒன்றாகவும் கொண்டு கிட்டதட்ட ஏழுநூறாண்டுகள் முஸ்லிம்கள் ஆண்டிருக்கிறார்கள். எனினும் கோயில்கள் கொஞ்சமும் சிதை வின்றியும் கோயில்களில் உள்ள சிலைகள் அப்பழுக்கற்ற தன் மையில் இந்துக்களால் வணங்கப் படும் வகையில் ஆலயத் துள்ளும் இருந்ததே-இருப்பதே வரலாறு. என் ஆனால் முஸ்லிம் மன்னர்கள் கோயில்களை இடித்தார்கள்; கொள்ளையிட்டார்கள்; விக்ரகங்களை: உடைத்தார்கள்" கின்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வெள்ளையனால் விரிவடையச் செய்யப்பட்டுள்ளது. வெள்ளையன் அகன்ற பிறகும் இந்நினை வினை அகற்றி உண்மையைக் காணுகின்ற, கண்டுரைக்கின்ற எண்ணம் மிகுந்திடவில்லை. தேச நலத்தில் அக்கறை கொண்ட, மக்களிடம் ஒற்றுமை நிலவிட வேண்டும் எனப் பேசுகின்ற ஆட்சியாளர்கட்கு இதில் கவனம் செலுத்திட நேரம் இல்லை போலும்! தமிழ்நாட்டில் ஆற்காட்டில் முஸ்லிம் ஆட்சி நடந்ததுண்டு. ஆற்காட்டிற்கு அண்மையில் தான் சிறப்பு மிகு திருவலம் ஆலயம் உளது. வள்ளிமலை, திருத்தணி, காஞ்சிபுரம் அனைத்துமே ஆற்காட்டிற்கு அருகில்தான் இருக்கின்றன. இவற்றில் எந்தக் கோயில் இடிக்கப்பட்டது? எக்கோயிலில் உள்ள சிலை உடைக்கப்பட்டது? எந்தக் கோயில் ஆற்காட்டு நவாபால் கொள்ளையிடப்பட்டது? இதைப் போன்று, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களிலெல்லாம் முஸ்லிம்கள் ஆட்சி நடந்தே உளது. அங்குள்ள ஆலயங்கள் இடிக்கப்பட்டனவா? சிலைகள் உடைக்கப் பட்டனவா? மதுரை மீனாட்சிக்கும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கும் உள்ள கோடிக்கணக்கான புராதனமான வயிர-வைடூரியத் தங்க நகைகளைக் கொள்ளையிடாமல் எதைப் போய் அங்கு ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் கொள்ளையிட்டார்கள்? வேலூர்க் கோட்டைக் கோயிலிலும் செஞ்சிக் கோட்டைக் கோயில்களிலும் சிலைகள் இல்லை. அங்கே கையிடுகள் கூறுவது
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/66
Appearance