தா. 39 உதாரணமாக, மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதி யுள்ள புத்த-சமண வரலாற்று நூற்களைப் படித்தால் தெரியும். மற்றும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளைப் புரட்டி னால் காணலாம். வரலாற்று மேதை பன்மொழிப் புலவர் அப்பாதுரை அவர்கள் எழுதியுள்ள 'தென்னாட்டுப் போர்க் களங்கள்' எனும் அரிய நூலினைப் பார்த்தால் அறிய லாம். சிலைகட்கு சக்தி இருப்பதாக முஸ்லிம்கள் நம்புவதில்லை ஆனால் திருடிவந்த சிலைக்கு அதிக சக்தி உண்டு என நம்பு வதும் இரவோடிரவாக அடுத்தவன் கோயிலில் உள்ள சிலையைத் திருடிவந்துவிடுவதும் இந்து வைதிகர்களிடையே இன்றும்கூட உண்டு. நாகையில் இருந்த புத்தவிகாரில் உள்ள தங்கத்தினாலான புத்தர் சிலையை எடுத்து வந்து பெருமாள் கோயில் கட்டியது யார்? சிதம்பரத்தில் உள்ள சிலையைக் கடலில் தூக்கி எறிந்தது எந்த மன்னன்? உடையவர் எனச் சிறப்பித்துக் கூறப்படும் வைணவப் பெரியாரான ராமானுஜாச்சாரியார் அவர்களை தமிழ் நாட்டை விட்டே வெளியேறிடச் செய்தது யார்? கூரத்தாழ்வான் சைவரல்ல என்பதற்காக அவர் தம் கண் களைத் தோண்டிட உத்தரவிட்டது யார்? சமணர்களைக் கழுவிலேற்றியது யார்? இது போன்ற நிகழ்வுகள் நடந்திடாது காத்ததே இங்கு நிலைத்து நடந்த இஸ்லாமிய அரசுகள்தாம்! இவற்றை விரிக்கிற் பெருகும். இவை போன்ற சிலை திருட்டுக்களும், கோயில் அழிப்புக்களும், கோயில் கொள்ளை அடிப்புகளும் முஸ்லிம்களின் ஆட்சியில் தடுக்கப்பட்டன. அவர்கள் காலத்திலும் இது நடந்ததென்றால் அது மத்தியில் உள்ள இஸ்லாமியப் பேரரசின் பலம் குன்றியக்கால் மராட் டியத்தில் தோன்றிய பலாத்காரமும் படுகொலையும் ஆளுகின்ற வெறியும் பிடித்த பான்ஸ்லேக்களின் காலத்தில்தான்!
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/68
Appearance