உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியபகுதியில் திருவண்ணாமலை ஆலயத்தை பாதுகாப்புக் கேந்திரமாகக் கொண்டு சிதம்பரம்தொட்டு சதுரங்கபட்டினம் வரையிலும் மேற்கே கள்ளக்குறிச்சி முதல் வடக்கில் நெடுகிலுமாக நடத்தி யுள்ள கொள்ளை, கொலை, கற்பழிப்பு, கோயில் அழிப்பு, சிலை எடுப்பு... இத்யாதிகளை அக்காலச் சரித்திர நுகர்வால் ஓரளவிற்குக் காண இயலும். விரிவாக ஆனந்தரங்கம்பிள்ளை யிள் நாட்குறிப்பு அறிவிக்கும். இந்த நாட்குறிப்புக்களை அச்சிடுவதை அண்மையில் நிறுத்திவிட்டார்கள். சென்னைக் காப்பகத்தில் சென்று காண வியலும்! அச்சிட்டதை நிறுத்தியதற்குக் காரணம் உண் யையை மக்கள் அறிந்திடக் கூடாதென்கின்ற காரணத்தா லிருக்கலாம். இக்காரணத்தாலேயே எம். என். ராய் எழுதிய

  • "இஸ்லாமியச் சரித்திரச் சாதனை' எனும் நூல் வெளிவருவது

தடுக்கப்பட்டிருக்சிறது எனலாம். வீர சவர்க்காரின் எரிமலை நூல் பரவுவது நிறுத்தப்படுகிறதும் இதே காரணத்தால்தான் போலும்! இன்னும் எத்தனையோ? அன்றும் சரி, இன்றும் சரி, கோயில்களில் கொள்ளை அடிப் பவர்கள், சிலையைத் திருடிச் சென்று விற்று வாழ்பவர்கள் முஸ்லிம்கள் அல்ல. தனி ஒரு முஸ்லிம்கூட இத்தொழிலில் ஈடுபட்டதாக இதுவரை செய்தி இல்லை என்பது நிதர்சன மாகத் தெரிந்திருந்தும் முஸ்லிம்களின் மீது பழி சுமத்துபவர் களை என்னென்பது? "குறிப்பாக இஸ்லாத்தின் பேரில் வரலாற்றறிஞர் பலருக் குள்ள தப்பெண்ணத்துக்கு "இரு வரலாற்றுக் கூறுகளே காரணம். ஒன்று அவர்கள் ஒரு கையில் வாளும் ஒரு கையில் குரானும் கொண்டு சமயத்துடன் அரசியலும், அரசியலுடன் சமயமும் இணைத்தனர் என்ற கருத்து. மற்றது இந்திய மாநிலத்தில் சைவ வைணவக் கோயில்களை அவர்கள் கொள்ளையிட்டனர்' ' என்பது. .