61 உண்மையில் தம் அரசியல் வெற்றிக்குத் தெய்வீகத் தோற்றந் தர விழைந்த எல்லா அரசர்களும், பேரரசர்களும் இதைச் செய்யத் தவறவில்லை. கிறிஸ்தவ, சைவ, வரலாறுகள் இதனைக் காட்டும். மதமாற்றும் செயலில் பல்லவன் வைணவி மகேந்திரவர்மன் மன்னன் தென்னார்க்காட்டுப் பாடலி நகரிலுள்ள சமணப் பள்ளியை அழித்ததையும், கிருமி கண்ட சோழன் தில்லைப் பெருமாளைக் கடலில் எறிந்ததையும், மேலை உலகில் ஆங்கில எட்டாம் ஹென்றி கத்தோலிக்க மடங்களை அழித்ததையும் பெர்டினாந்து-இசபெல்லா அரச தம்பதி ஸ்பெயினில் இஸ்லா செய் மிய நாகரிகத்தை அழித்ததையும் வரலாறு பதிவு துள்ளது. தவிர சைவ வைணவக் கோயில்களை அவ்வச் சமயத்தவரே கொள்ளையிடத் தவறியதில்லை. காஞ்சியை விசய நகரப் பேரரசர் காலத்தில் பாமினிப் பேரரசன் மட்டுமின்றி ஒரிசாவை ஆண்ட கசபதி மன்னரும் கொள்ளையிட்டனர். மராட்டியர் கொள்ளைக்களான கோயில்கள் பல. மராட்டிய இனத்தவரல்லாதவர் பிராமண ராய் இருந்தால்கூட அவர்களை (மராட்டியர்) அழிக்கத் தயங்க வில்லை என்று காண்கிறோம். மற்றும், பல்லவரும் சோழரும் எதிரி நாட்டுச் செல்வத்துடன் செல்வமாகக் கோயில்களையும் கொள்ளையிட்டு தம் நாட்டு மக்களிடையே அதையே வெற்றிச் சின்னமாக காட்டும்படி சிலைகளைக் கொண்டு வந்தனர் என்ப தையும் நாம் மறக்க முடியாது .. கூறுபவர்:- 85 பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை M.A., L.T.நூல்: தென்னாட்டுப் போர்க்களங்கள் பக்கம் 299 கோயில்களை முஸ்லீம் மன்னர்கள் கொள்ளையிட்டார்கள் என்கின்ற கூற்றிற்கு நாமறிந்தவரை 'கஸ்னவி (கஜ்னி) முகம்மது சோமநாதபுரத்தைக் கொள்ளையிட்டார்' என்பதைத்
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/70
Appearance