உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தவிர்த்துச் சான்றுடன் தக்க வகையில் மெய்ப்பித்திடக்கூடிய தாக எது ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. 'சோமநாதபுரம் கோயிலையும் வாம மார்க்கக்தினர் (சக்தி வணக்கத்தினர்) கஜ்னி முகம்மதை அழைத்து வந்து கொள்ளை யிட வைத்தனர்' என முனைவர் கே. எம். முன்ஷிதமது 'ஜெய் சோமநாத்' எனும் நூலில் கூறியுள்ளார். முஸ்லிம் மன்னர்கள் அச்செயலில் ஈடுபட்டனர் என விவாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும்கூட, 'சைவ-வைணவச் சமயங்களைச் சார்ந்த மன்னர்களும் அச்செயலை முஸ்லிம் மன்னர்கட்கு முன்னரே செய்துள்ளனர்' எனப் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை M.A,L.T. அவர்கள் கூறுவதை மேலே கண்டோம். அது மட்டுமின்றி 'உலகம் தழுவியதாக இது, அங்கிங்கெனாதபடி எங்கும் நடந்திருக்கிறது. கிருஸ்தவ மன்னர் முதல் ஏனையோ ரும் செய்திருக்கின்றனர்' எனச் சான்றுடன் பகர்கின்றார் பன் மொழிப் புலவர். அவற்றில் இன்னொன்று சைவ வைண வர்கள் தம்தம் சமயம் சார்ந்த கோயில்களையே கொள்ளையிட் டுள்ளனர்' என்பது. கா. அப்பாதுரையார் தரும் தகவல் மட்டுமின்றி மயிலை சீனிவெங்கடசாமி அவர்கள் தந்துள்ள வரலாற்றுச் செய்தி களைப் படிக்கின் இரத்தம் உறைந்துவிடும். ஆம் அவர் கூறுவதைப் பாருங்கள். சமணக் கோயில்களையும் பௌத்தக் கேர்யில்களையும் வைணவர் கைப்பற்றும்போது முதலில் நரசிங்க மூர்த்தியை அமைப்பது வழக்கம். BD கூறுபவர்:- மயிலை சீனிவெங்கடசாமி நூல் : சமணமும் தமிழும்-பக்கம் - 204 - காஞ்சியில் பண்டைக் காலத்திலிருந்த பௌத்த சமண கோயில்கள் சைவ வைணவ கோயில்களாக மாற்றப்பட்டன. மேற்படி நூல் - பக்கம் 199.