64 கவர்ந்து சென்று அந்தப் பொன்னைக் கொண்டு திருவரங்கத் தில் திருப்பணி செய்தார்" ஷை நூல் - 37. மயிலை சீனிவேங்கடசாமி இந்து சமயம் சார்ந்தவர் என்பதை நாடறியும்; அவர் தம் பெயரும் அறிவிக்கும். அவர் எழுதியுள்ள ‘சமணமும் தமிழும்', 'பௌத்தமும் தமிழும்' என் கின்ற நூற்களை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித் தாந்தக் கழகந்தான் வெளியிட்டுள்ளது. ஒரு பதிப்பல்ல, பலபதிப்புக்கள். அவற்றைப் படிப்போர் புத்த-சமண சமயங் களைக் 'கபளீகரம்' செய்து விட்ட சைவ - வைணவம் ளிட்ட இந்துமதத்தின் மீது காழ்ப்புறுவதில்லை. மாறாக ஆராய்ச்சியெனச் சுட்டி அமைகின்றனர். இந்தப் பண்பு வர வேற்க வேண்டியதுதான். ஆனால் முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை ஆராய்ச்சியாக மதிப்பதில்லை. சமயப்பகை வளர்க் கும் கருவியாகவே கொள்கின்றனர். இது ஏன்...?ஏன்?... உள் ஒன்று நாம் கருத்தில் கொள்ள வேண்டிள்ளது. புத்த சமய அரசும், ஜைன சமய அரசும் அகன்ற உடன் அம்மதத் தினரை பெருமளவில் தங்கள் சமயத்தவராக ஆக்கி விட இந்து சமயத்தினரால் முடிந்துளது. அஃதேபோன்று அவர்கள் ஆலயங்களைத் தங்கள் கோயில்களாக ஆக்கிக் கொள்ளவும் முடிந்துள்ளது. ஆனால்...ஆனால்... இந்தியாவில் இஸ்லாமியராட்சி அகன்ற பின்பும் என்ன தான் முயன்றும் இஸ்லாமியர்களை இந்துக்களாக ஆக்கிவிட முடியவில்லை. இஸ்லாமியர்களின் பள்ளிகளைத் தகர்த்தெறிந் திட ஆகிவிடவில்லை. இந்தக் கோபந்தான் இந்துப்பொது மக்களை இஸ்லாத்தின்மீது முஸ்லிம்களின் மீது பகைகொள்ளு மாறு தூண்டிவிடும் முயற்சியில் சர்வ சமயக் காப்பாளர் களாகத் திகழ வேண்டிய இந்து சமயப் பெரியவர்களைக் கூட ஈடுபட வைக்கிறதெனலாம். இது தவிர்த்து இஸ்லாம் இந்து பகையானதன்று என்பதை அவர்களே சமயத்திற்குப் அறிவார்கள்-
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/73
Appearance