பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெப்பக் கொடுமை தாங்காமல் வீதி நடுவே செத்ததுபோல் சர்ப்பம் ஒன்று கிடந்ததடா. சற்றும் அசைய வில்லையடா. இரையைத் தேடிப் பறந்துமிக ஏங்கித் திரிந்த ஒருகாகம் விரைந்து கீழே பாய்ந்ததடா. விர்'ரெனத் துக்கிச் சென்றதடா. செத்துப் போனது பாம்பெனவே தீர்மா னித்தே அக்காக்கை கொத்தித் தின்னப் பார்த்ததடா. கொடிய காலம் வந்ததடா ! துரக்கம் நீங்கி அப்பாம்பு துடிது டித்தே எழுந்ததடா. துக்கிச் சென்ற காக்கைதஇனத் துணிந்து கடித்து விட்டதடா. கடித்ததும் வலியைத் தாங்காமல் காக்கை சுருண்டு வீழ்ந்ததடா. துடித்தது, சாகும் தறுவாயில் சொல்லிய வார்த்தைகள் இவையேயாம்:

  1. 95