பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிசி பருப்பு விற்க வேண்டி

வணிகன் ஒருவனும்
அதிக தூரம் தன்னி லுள்ள ஊரை நோக்கியே,

பெரிய கழுதை ஒன்றில் சுமையை

ஏற்றிச் சென்றனன்;
பின்னல் அதனைத் தொடர்ந்த வாறே
போக லாயினன்.


அந்தக் கழுதை வணிக னுக்கே

சொந்த மென்று நீ
அவச ரத்தில் எண்ணி டாதே!
கதையைக் கேட்டிடு.

சொந்த மில்லை! வாட கைக்கே

அதைய மர்த்தினன்.
தொடர்ந்து கழுதைக் கார முனியன்
ஒட்டி வந்தனன்.

51