பக்கம்:ஈச்சம்பாய்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

ஈச்சம்பாய்



இதற்கிடையே,, பலவந்தமாகக் கொண்டு வரப்பட்ட கிழவிகளின் கூக்குரல் அதிகமாகியது. ஒரு பாட்டி, வாயில் அடித்துக் கொண்டாள். இன்னொரு கிழவி வயிற்றில், "அய்யய்யோ... அம்மம்மோ- அக்கிரமக்காரங்களக் கேக்க ஆளு இல்லியா' நாசமாப் போற பயலுகளா. எதுக்குடாப்பா, இப்டி அக்ரமம் பண்றீய? அழிஞ்சிப் போயிடுவிங்கடா அநியாயக்காரப் பாவிங்களா..." என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

ஆணையாளர் ஆணையிட்டார்.

"யார் யார் எந்தெந்தப் பெரியம்மாக்கள் எந்தெந்த இடத்துல பிடிச்சிங்களோ... அந்தந்த இடத்துல அதுங்கள விட்டுட்டு வாங்க. உம்.. ஜல்தி... குயிக்..."

கிழவிகள் காரிலும் ஸ்கூட்டரிலும் சைக்கிளிலும் பறந்தார்கள். பொன்னம்மா பாட்டி மட்டும் மகனோடு அங்கே நின்றாள். அவள் முந்தானை கனத்திருந்தது. ஆணையாளர் கத்தினார்.

"பாட்டி! ஒனக்குக் கொஞ்சமாவது மூளை இருக்கா? பொறுப்பில்லாம நீ பாட்டுக்குப் போயிட்டால் என்ன அர்த்தம்? யூஸ்லஸ்... கலெக்டரு என் தாலிய அறுத்தால், நீயா திருப்பிக் கட்டுவ? என் பதவிக்கு உலை வைக்கப் பாத்துட்டியே. யோவ் சதுரவட்டை! ஒன் அம்மாவ நாங்க ஏதோ கடத்தனதுமாதிரி குதிச்சியே! இப்போ என்ன சொல்லுற... சிரிக்காதய்யா...... அசிங்கமா இருக்குது."

"கோவிச்கச்காதப்பா! நீ மவராசனா இருக்கணும். என்னோட மருமகள் மச கையா இருக்கா. இந்த ஆப்பிள் பழத்தைக் கொடுத்தா, ஆசையோட திம்பா. அதுக்காவத்தான் அடாவடியா பஸ் சார்ச்சிக்கு எட்டணா வாங்கிக் கிட்டுத் தலமறவாயிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/138&oldid=1371808" இலிருந்து மீள்விக்கப்பட்டது