பக்கம்:ஈச்சம்பாய்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

147



டெய்லர் சுந்தரத்தின் மனைவி - பழைய சட்டைபோல் நைந்திருந்த அவள் - கத்த முடியாமல் கத்தினாள். "அப்படின்னா நீ ஓடிவந்தியே, அப்பவே கொயந்தயக் கொண்டு வந்திருக்கணும். ஆசையில கொயந்தய விட்டுட்டே தாய்க்காரி செய்ற வேலயா?"

கூட்டத்தில், பழைய பஞ்சாயத்துத் தலைவர், பஞ்சாயத்துப் பேசினார். “எதுக்கு வீண் பேச்க? இந்தப் பையங்கிட்ட கேப்போம். யார்கிட்ட இருக்கணுமுன்னு நினைக்கானோ, அவங்ககிட்ட இருக்கட்டும். இதுக்குப் போய்க் கத்தி எதுக்கு, கல் எதுக்கு' அவனை இறக்கி விடப்பா."

கன்னய்யா, தோளில் கிடந்தவனை இறக்கப் போனான். அந்தச் சிறுவன், அவனை நண்டு மாதிரி பிடித்துக் கொண்டு, அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டான். கன்னய்யா, அவனை வலுக்கட்டாயமாய் விலக்கி, தரையில் நிறுத்தியபோது, மீண்டும் அவன் கால்களைக் கட்டிக் கொண்டான், யாரும் கேட்கு முன்னாலேயே, "அப்பாதான் வேணும்... அப்பாதான் வேணும்." என்றான்.

"சரி... அப்பாகிட்டயே இருப்பா" என்றார் பஞ்சாயத்து.

பூவம்மா, இப்போது கூட்டத்திற்கு மத்தியில் வந்து நின்று கொண்டு அழுத்தமாகப் பேசினாள். "அப்பாகிட்ட இருக்கணுமுன்னு பஞ்சாயத்து செய்துட்டால், கொயந்த அவர்கிட்ட இருக்க முடியாது..?"

பூவம்மா கன்னையாவின் எதிரே வந்து நின்று சொன்னாள்: 'எட்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் பின்னி மில்லுக்கு காலையிலேயே வேலையில சேருறதுக்கு சைக்கிள்ல போனியே ஞாபகம் இருக்கா? அன்னிக்கு நல்ல மழை. ஞாபகம் இருக்கா? திண்ணையில் படுத்திருந்த இவர வீட்டுக்குள்ள படுக்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/149&oldid=1371884" இலிருந்து மீள்விக்கப்பட்டது