பக்கம்:ஈச்சம்பாய்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

ஈச்சம்பாய்



வந்தப்போ நீங்கக்கூட கிண்டல் அடிச்சீங்களே! 'ஒங்களுக்கு மீசை பெரிசா- முகம் பெரிசான்'னு கேட்டீங்களே. அவரு, வயலுல தன்னந்தனியா போகும்போது, அந்த சாதிப் பயலுக ஒரே போடா போட்டு கொன்னுட்டானுக. எங்கண்ணன் கையெடுத்துக் கும்பிட்டிருக்கார். அப்படியும் அந்தப் பயலுக விடல - அது அவங்களோட சாதிப் புத்தி.'

பழனிச்சாமி, இருக்கையிலிருந்து எழுந்தார். தேநீர் கோப்பைத் தட்டோடு வந்த பூமாரி, நடையை நிறுத்தி, நின்ற இடத்திலேயே நின்றாள். பால்கனியில் மாப்பிள்ளைக்கு மட்டும் முகம் காட்டிய புனிதா, அவர்களின் அருகே வந்து அம்மாவின் முதுகிற்கு பின்னால் நின்று, அவள் தோள் வழியாய் முகம் நீட்டினாள், மாப்பிள்ளையின் கண்கள், அவள் கண்களை ஆற்றுப்படுத்தின. பழனிச்சாமி இருக்கையில் உட்காராமலே, வேதனையோடு பேசினார்.

'ஒரு நாய், இன்னொரு நாயைத் துரத்தும்போது, துரத்தப்பட்ட நாய், வாலை, காலுக்குள்ள விட்டாலோ, இல்லன்னா மல்லாக்கப் படுத்து நாலு காலையும் மேலத் தூக்குனாலோ, கடிக்கவந்த நாய், கடிக்காது. ஆனால் இந்த மனுசன் மட்டுந்தான், எதிரி கையெடுத்துக் கும்பிட்டாலும், கும்பிட்ட கைகையே வெட்டுவான். அந்தக் கொலகாரப்பயலுகள விடப்படாது'.

'கவலைப்படாதீக சம்பந்தி. அவனுகளுல இரண்டு பேரைக் காலிபண்ணிட்டோம். இன்னொருத்தனோட பிள்ளைத்தாச்சிப் பெண்டாட்டிய துடிக்கத் துடிக்க வெட்டிப் போட்டோம். மற்றொருத்தனோட வயசான அம்மாவ ஓட ஓட வெட்டி தலையை மட்டும் எடுத்துக்கிட்டோம். இன்னும் ரெண்டுபேர்தான் பாக்கி. சீக்கிரமா முடிச்சிடுவோம்'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/162&oldid=1371751" இலிருந்து மீள்விக்கப்பட்டது