பக்கம்:ஈச்சம்பாய்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

ஈச்சம்பாய்



முன்பெல்லாம் இப்படி வெளியேறும்போது, 'நான் ஏதும் தப்பு செய்திட்டேனோ' என்று குழம்புகிறவள், இப்போது உச்சி முதல் மூக்கு வரை குழப்பத்திற்குப் பதிலாக, கோபத்தை ரெப்பிக் கொண்டு சமையலறைக்குள் வந்துவிட்டாள். சிறிது நேரம் சுவாமி விவேகானந்தர் மாதிரி கைகளைக் கட்டிக் கொண்டு ஒரே சமயத்தில் தூரத்துப் பார்வையாகவும், கிட்டப் பார்வையாகவும், கண்களை மாற்றிக் கொண்டு அசைவற்று நின்றாள். சிறிது நேரம்தான். பிறகு முறுக்கி வைத்த உடம்பை, நெகிழ்வாக்கியபடியே, தனக்கே. கேட்காத குரலில் முணுமுணுத்தாள்...

'சொந்த மகன், சுய சம்பாத்தியத்துல கார் வாங்கினது பொறுக்காத இவருல்லாம் ஒரு அப்பாவா... படித்த குடும்பத்துல பிறந்திருந்தா காரோட அருமை தெரியும்.... கழுதைக்கு தெரியுமா.. சீ.. அப்படியெல்லாம் ஒப்பிடக் கூடாது. ஆனாலும் தற்குறி குடும்பத்துல பிறந்த மனுஷன் கார் வாங்குறது கண்டு அரண்டு போவது சகஜம்தான். இருபத்தைந்து வருடத்துக்கு முன்னால மாமனார் வாங்கிக் கொடுத்த சைக்கிளையே மாற்ற முடியாத மனுசனுக்கு, கார் என்கிறது பெரிய விசயம்தான். வாடகைக் கார்ல கூட ஏறாத வம்சத்துக்கு கட்டவண்டி புத்திதான் இருக்கும்.. தவமிருந்து பெத்த எம்பிள்ளைக்கு இவரே கண்ணு போட்டுடுவார் போலுக்கே...'

கோதையம்மா, பழைய சாம்பாரை சூடேற்றாமல், பழைய நினைவைச் சூடேற்றிக் கொண்டாள்.

வீட்டிலிருந்து, கால்களுக்கு இருமல் எடுத்தது போல் லொக்கு, லொக்கு என்று நடந்து, அந்தக் காலத்து டபிள் விசில் பஸ்களில் தொங்கியபடியே இவர் செகரட்டேரியேட்டில் ஒரு லோலுபட்ட வேலைக்கு போனது, அந்தம்மா மனதில் கருப்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/172&oldid=1371722" இலிருந்து மீள்விக்கப்பட்டது