பக்கம்:ஈச்சம்பாய்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

187



"மேடம்' முகத்தைப் பார்க்கிறதுக்கு மட்டும் கண்ணாடியைப் பாருங்க. ஒங்க நிறத்தையும் பார்க்கணுமுன்னால். பீர்க்கம்பூவைப் பாருங்க. மஞ்சள் ஷேட்ல சிவப்பு நிறமாய் இருக்கும். அதுதான் உங்க நிறம்."

"மேடம்... காட்டுப் பகுதிக்குப் போயிருக்கீங்களா....? கோணலான தென்னை மரங்கள் பக்கத்துல, முள்ளம் பன்றி மாதிரியான ஈச்சமரங்களின் அருகில் கன்னங்கரேலென்று இருக்கிற பனைமரங்களுக்குச் சமீபத்துல ஒரு மரவகை மட்டும் பளபளப்பாய், ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையே நேர்கோடு போட்டது மாதிரி நளினமாய் ஒயிலாய் நிற்கும். அதுதான் பாக்குமரம். இந்தக் குடியிருப்புக் காட்ல வெவ்வேறு பெண் மரங்கள்ல நீங்க ஒரு பாக்குமரம். எஸ் மேடம், யூ ஆர் எ அரக்னட் ட்ரீ. வேணுமுன்னால் மிஸ்டர் கப்புகிட்டே.."

அப்போது காதுகளில் உதாசீன மாய் வாங்கிய வார்த்தைகளை இப்போது அவள் வாயில் புன்னகையாய் மென்று விழுங்கினாள். கண்களில் ஒளியாய்க் காட்டினாள். நெஞ்சிலே ஒரு சின்னச் சுகம். அதைப் பெரிதாக்குவதுபோல, அதோ அவன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பாராததுபோல் உள்ளே போகப் போனான். அவனோ சிரித்தபடியே வந்து அவளை நிற்க வைத்தான். அவள் வார்த்தைகளால் கட்டவிழ்த்தாள். நெகிழ்ச்சிக் குரலில், உள்ளத்தை, தேங்கயாய் உடைத்துக் காட்டினாள்.

“என் பேர் சந்திரா. இந்த வீட்லதான் இருக்கோம். மறந்து போறதுக்கு ஆறாவது ஏழாவது வீடுல்ல."

"ஒங்களை மறக்க முடியுமா மேடம்? காட்டுப் பகுதியில் கார்ல போகும்போது பாக்கு மரத்தைப் பார்க்கேன். அப்போ ஒங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/189&oldid=1371843" இலிருந்து மீள்விக்கப்பட்டது