பக்கம்:ஈச்சம்பாய்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

37



பாண்டியா, மீண்டும் முகத்தை, சாலைப் பக்கமாக முகத்தைத் திருப்பியபோது, குமுதா குபீர் சிரிப்பானாள். கன்னங்கள் உப்பின. கண்கள் நாட்டியமாடின. எப்படி இங்கிலீஸ்ல அடுக்கு மொழி பேகறார்... குமுன்னு என் பேரக்கூட எப்படி ஜென்டிலா உச்சரிக்கிறார். இந்த இளங்கோவும் இருக்குதே - குமுதா... ஆ... ஆ... ன்னு ஒப்பாரி வைக்கும்.

குமுதா, ஆவலை அடக்க முடியாமல், அவன் இடது தோளுக்கு மேல் கழுத்தை ஒருச்சாய்த்து நீட்டி அவன் முகத்தைப் பார்க்கப் போனான். ஜோடி சேர்ந்தபோது அவனை வேண்டா வெறுப்பாக பார்த்ததால் அவன் முகம் அவள் மனதில் சரியாக பதியவில்லை. இப்போது பதிவு செய்யப் போனாள். அந்தச் சமயத்தில் எதிரே ஒரு வண்டி இவன் சடன் பிரேக் போட்டான். குமுதா, பயந்து போய், மார்பகம், அவன் முதுகில் கசங்கும்படி, அவன் இடுப்பைச் சுற்றி கைளை வளையமாக்கிக் கொண்டாள். பிறகு இளங்கோவை நினைத்து வளையத்தை உடைத்தெறிந்தாள். இதனால் என்னவோ பாண்டியாவுக்கு ஏகப்பட்ட உற்சாகம். மோட்டர் பைக்கின் இருக்கையில் இருந்து உடம்பை அரையடித் தூக்கி நிறுத்தியபடியே பாட்டு பாடினான். அந்தப் பாட்டிற்கு ஏற்ப தன்னையும், வண்டியையும் ஆட்டினான்.... 'தில்லானா.. தில்லானா. நீ தித்திக்கின்ற தேனா, திக்கு, திக்கு, நெஞ்சில் தில்லானா. மஞ்சக் காட்டு மைனா- நீ கொஞ்சிக் கொஞ்சிப் போனா..

பாண்டியா அந்தப் பாட்டிற்கு ஏற்ப அங்குமிங்குமாய் ஆடினான். குமுதாவுக்கும் ஆட வேண்டும் போல் இருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்த பாட்டு இது. எப்படி டாடுறார்! இந்த இளங்கோவும் இருக்குதே. தெரிஞ்சதெல்லாம் பாரதியார் பாட்டு, இல்லாட்டா... பாடாதி தேவாரம், திருவாசகம். இந்த மாதிரி மாடர்னா பாடத் தெரியலியே....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/39&oldid=1371936" இலிருந்து மீள்விக்கப்பட்டது