பக்கம்:ஈச்சம்பாய்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

ஈச்சம்பாய்


கோடுகள், அழகான ஆண்களும் பெண்களும் காதல் களி நடனம் புரியும் ஓவியங்கள். - இந்த இளங்கோ இருக்காரே. இவரும் இவரு ஜிப்பாவும். இந்த மாதிரி ஒரு சட்டை வாங்கி அவருக்கு மாட்டனும், சரியான நாட்டுப்புறம்...

பழைய மாமல்லபுரம் சாலையில் பெருங்குடிப் பக்கம் அந்த மோட்டார் பைக் ஒடியபோது, எதிரே முட்டப்போவதுபோல் வந்த லாரியைக் கண்டு, பாண்டியா தடுமாற, பைக்கும் தடுமாறித் தடம் மாறியது. உடனே குமுதா பயந்துபோய் அவன் தோளைப் பிடித்துக் கொண்டாள்.- பயந்துபோய்தான்... பிறகு முன்னெச்சரிக்கையோடு, தன் உடம்பை, பின்பக்கமாக நகர்த்திக் கொண்டாள்.

என்றாலும், ஒற்றை வளையக்காரன், இடது கையைப் பின்பக்கமாய்க் கொண்டுபோய் இருக்கையைத் தடவினான். பிறகு, தடவிய கையை நீட்டி, அவள் கையைப் பற்றிக் கொண்டான். அவள் அவசர அவசரமாக கையை இழுத்தபோது, வண்டி மீண்டும் தாறுமாறாய் ஓடியது. உடனே, கையை இழுப்பதை நிறுத்தி, அந்தக் கையை, அவன் கையின் போக்கிற்கு விட்டுக்கொடுத்தாள். இல்லன்னா, வண்டித் தாறுமாறாய் போய் விபத்து ஏற்பட்டு விட்ப்பிடாதே. விபத்து ஏற்படப் போவதுபோலே எதிரே ஒரு சைக்கிள்காரன் தும்மல் போட்டபடியே குறுக்கே பாய்ந்தான். இதனால் பைக் குறுக்கு வெட்டாய்ப் பாய்ந்து, சரியப் போனது. குமுதா மீண்டும் பயந்தாள். மீண்டும் அவன் தோளைப் பிடித்தாள். வண்டி சரியானதும், பாண்டியா அவளைத் திரும்பி பார்த்தபடி பாடுவதுபோல் பேசினான். ‘பயப்படாதே குமு! உன்னோட சேப்டி... என்னோட டியூட்டி... யூ ஆர் பியூட்டி... ஆனாலும் நான் அடிக்க மாட்டேன் லூட்டி... யூ ஆர் எ டெய்ட்டி.. ஓ.கே. குமு. பயப்படாதே... நான் ஜென்டில்மேன்.’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/38&oldid=1371980" இலிருந்து மீள்விக்கப்பட்டது