பக்கம்:ஈச்சம்பாய்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

53



மாரிமுத்து தம்பியின் முடியைப் பிடித்தக் கையை எடுத்து, இன்னொரு கையையும் சேர்த்து, தம்பியின் கழுத்தில் கவுண் போல் போட்டுக் கொண்டான்.... முத்துக்கனியை பார்த்தபடி ஒப்பித்தான்....

'இவன் பழச மறந்துட்டாம்மா.... என் தங்கச்சிங்க புல்லுக்கட்டு கமந்தும், நான் வாடகை வண்டி அடிச்கம் இவன படிக்க வச்சோம்... அப்போ உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கழுகாகுமான்னு ஊர் முழுக்கச் சொன்னவள் ஒன் மாமியார். ஒன் கொளுந்தன், அதோ ஒளிஞ்சு கிடக்கானே வீராதி வீரன்.. அவன் காலேஜூக்கு பைக்குல போவான். அதே காலேஜூக்கு என் தம்பி.... ச்சீ.. இவனா தம்பி.... இந்தப்பய கால்தேய நடப்பான். ஒரு தடவையாவது பைக்குல ஏறுடான்னு சொல்லியிருப்பானா... அவன்கிடக்கான்... இவன்மேல கண்ணு போடுற அந்தப் பாப்பா மட்டும் என்னவாம்... நாலு வருசத்துக்கு முன்னால் கோவில் திருவிழாவுல, இவன பார்த்துட்டு தெக்குத் தெரு மாடத்தி அக்கா பாப்பாவப் பார்த்து 'ஒன் முறை மாப்புன எப்படி ஜம்முனு இருக்கான் பாருன்னு கம்மா ஒரு பேச்சுக்கு கேட்டிருக்காள்... ஒடனே இவள், 'எவன் எனக்கு முறை மாப்புளே.. இந்த மாதிரி பேச்ச எந்தக் காலத்திலயும் பேசாத'ன்னு இவன் காதுபடவே சொல்லி இருக்காள்... இவன் என் சம்சாரத்துக்கிட்ட சொல்லி குமுறியிருக்கான்.. அப்ப மட்டும் இல்லாத உறவு இப்போ எப்படி வந்துட்டாம்?... இவன் எடுத்த எடுப்பிலேயே ஆபிசர் ஆகாட்டா இந்த உறவு வந்திருக்குமா... இவன் டெல்லிக்கு ராசாவான்னாலும்.... எச்சில் தட்டக் காட்டி, எச்சிப் படுத்துனதுக்காக, சபதம் போட்ட தாய்க்கு பிள்ளை தானே. நீயே சொல்லும்மா.... அப்படியும் ஒன் நாத்தினார இவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/55&oldid=1371948" இலிருந்து மீள்விக்கப்பட்டது